×
 

மேடையில் பிரேமலதா பாலியல் புகார்! கடுகடுக்கும் ஸ்டாலின்!! முதல்வர் மருமகன் சபரீசன் பேச்சுவார்த்தை!

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுகளால், தி.மு.க., தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.

தி.மு.க. தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார் தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா. தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசிய ஒரு வாக்கியம், முழு கூட்டணியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்ற பிரேமலதா, பேச்சின் போது “தமிழ்நாடு முழுக்க ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் எங்கள் அண்ணன் மீது இருக்கு. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் இருக்கு. அதைத் தவிர வேற என்ன சொல்ல முடியும்? இந்த ஆட்சி மீது வேற ஒன்றும் சொல்ல முடியாது” என்று கூறினார்.

இந்த வார்த்தைகளைக் கேட்டு மேடையில் அமர்ந்திருந்த தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து “சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது” என்று எதிர்க்கட்சிகள் மீது பொய் பிரசாரம் செய்வதாகக் கூறி வரும் நிலையில், தனது கூட்டணிக் கட்சித் தலைவர் மேடையிலேயே இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

இந்த சம்பவத்துக்குப் பிறகு, பிரேமலதாவின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுகள் குறித்து தி.மு.க. தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது. கடலூர் பிரசாரக் கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் அவரை அறிமுகப்படுத்தியபோது எழுந்து வணக்கம் கூட தெரிவிக்காமல் அமர்ந்திருந்த சம்பவமும் ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தி.மு.க. கூட்டணியில் கடைசியாக இணைந்த தே.மு.தி.க.வுக்கு 10 சட்டசபை தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியும் வழங்கப்பட்ட நிலையில், பிரேமலதாவின் இந்தப் பேச்சு கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, நேற்று சேலத்தில் பிரேமலதாவை முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சந்தித்துப் பேசினார். அப்போது பிரேமலதா, “நான் பேச வந்தது வேறு, சொல்லியது வேறு” என்று சமாளித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், தி.மு.க. தலைமை இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களை மதிக்காமல் பேசும் பிரேமலதாவின் அணுகுமுறை, தி.மு.க.வுக்குள் ஏற்கெனவே இருந்த சலசலப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில், கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி திமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பிரேமலதாவின் பேச்சு தி.மு.க.வின் “சட்டம் ஒழுங்கு” பிரசாரத்துக்கு எதிராக அமைந்திருப்பது, எதிர்க்கட்சிகளுக்கு பெரும் ஆயுதமாகவும் மாறியுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் நேருவால் வந்த பிரச்னை! கழட்டிவிடும் நிர்வாகிகள்! ம.ம.க. வேட்பாளருக்கு பெரும் சிக்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share