மீண்டும் சர்ச்சை...! திமுக நிகழ்ச்சிகாக பயன்படுத்தப்பட்ட அரசு பேருந்துகள்...!
கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திரளான மக்கள் வந்திருந்தனர். இந்த வரவேற்பு ஏற்பாட்டிற்கு அரசு பேருந்து பயன்படுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திரளான மக்கள் வந்திருந்தனர். இந்த வரவேற்பு ஏற்பாட்டிற்கு அரசு பேருந்து பயன்படுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளவும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக கோவை வந்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: இலங்கை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை சந்தித்த மோடி..! சிங்கள மொழியிலும் அசத்தல்..!
விமான நிலையத்தில் வழிநெடுக காத்திருந்த தொண்டர்கள் ஜமாப் இசைத்தும், மேள தாளங்களுடன் உற்சாகமாக முதல்வரை வரவேற்றனர். அதே போல கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி நிதர்சனா முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்தும், சிறுவன் தர்ஷன் கலைஞர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வழங்கியும் வரவேற்றனர். மேலும் மகளிர் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வருக்கு நன்றி தெரிவித்து குழந்தைகள் மழலை குரலில் பேசினர். தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மேட்டுப்பாளையம் சென்றார். அங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்கின்றனர்.
இதனிடையே, முலமைச்சர் முக ஸ்டாலின் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தபோது திமுகவினர் அரசு பேருந்துகளில் பொதுமக்களை அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார் அப்போது திமுக சார்பில் வரவேற்பு மேற்கொள்ளும் பொருட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களை அழைத்து வந்து வரவேற்பு நிகழ்வை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
கோவை கோட்டத்திற்கு உட்பட்ட பேருந்துகளில் 45 பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வரி விதிப்பு... டிரம்பை புலம்பவிட்ட சீனா... அடிச்சான் பாரு ஆப்பு..!