“மன்னிப்பு கேட்கல...” - அமைச்சர் ஷாஜகானுக்கு வார்னிங் கொடுத்த திமுக... பாபநாசம் முழுக்க பரபரப்பு...!
அமைச்சர் ஷாஜகானை கண்டித்து பாபநாசம் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன .
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஷாஜகான் திமுகவை துடைத்தெறிவோம் என கூறியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு.
அமைச்சர் ஷாஜகானை கண்டித்து பாபநாசம் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன .
இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தனர் .
அமைச்சர் ஷாஜகான் திமுகவினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் பாபநாசம் சட்டமன்ற தொகுதி முழுவதும் அமைச்சர் ஷாஜகானை கண்டித்து போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை .
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் வெற்றி பெற்றார் . வெற்றி பெற்றதும் திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஷாஜஹானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஷாஜகானுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததும், சில நாட்களுக்கு முன் விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ஷாஜகான் பேசும்போது திமுக வை துடைத்தெறிவோம் என பேசி உள்ளார்.
இதையும் படிங்க: 6 மணிக்கு மேல் 'Not Reachable' மோட் ... இதுதான் நல்ல மாற்றமா? - விஜயை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!
இதற்கு பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுகவினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். திமுகவை துடைத்தெறிவோம் என்று பேசியதை கண்டித்து பாபநாசம் நகர் முழுவதும் இன்று திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பல்வேறு இடங்களில் கிழித்தனர். அமைச்சர் ஷாஜகான் பேசிய பேச்சுக்கு திமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமைச்சர் ஷாஜகான் திமுகவினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் அமைச்சர் ஷாஜகானுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என திமுகவினர் எச்சரித்துள்ளனர் .
அமைச்சர் ஷாஜகானை கண்டித்து பாபநாசம் நகர் முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இதையும் படிங்க: நிதி உண்மைகள் வெளிச்சம் பார்க்குமா? காத்திருக்கும் தமிழகம்… இன்று வெளியாகிறது வெள்ளை அறிக்கை..!