×
 

திமுகவுக்கு மறைமுக பிரசாரம்!! மாரி செல்வராஜை களமிறக்க திட்டம்! தவெக விஜய்க்கு போடும் ஸ்கெட்ச்!

தென் மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுகளைப் பெற, தேர்தல் பிரசாரத்தில் இயக்குநர் மாரி செல்வராஜை ஈடுபடுத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் (தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்டவை) தேவேந்திர குல வேளாளர் (தேவேந்திரர்) சமூகத்தின் வாக்குகளை தக்கவைக்கவும் மீட்கவும் திமுக தலைமை புதிய உத்தியை வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜை தேர்தல் பிரசாரத்தில் மறைமுகமாக ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாரி செல்வராஜ் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான 'மாமன்னன்' படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் திமுக தரப்புடன் நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. 

சமீபத்தில் வெளியான 'பைசன்' படத்தின் ஷூட்டிங் சமயத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளை உதயநிதி ஸ்டாலின் தரப்பு தலையிட்டு சரிசெய்தது. படம் வெளியான பின்னர் தென் மாவட்டங்கள் முழுவதும் திரையரங்குகளில் விளம்பரம் செய்ய மாரி செல்வராஜ் சென்றபோது, அனைத்து ஏற்பாடுகளையும் திமுக நிர்வாகிகளே செய்து கொடுத்தனர்.

இதையும் படிங்க: அரசு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... காமக் கொடூரன் போக்சோவில் கைது..!

சிவகாசியில் நடந்த பாராட்டு விழாவில் சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ ராஜா கலந்துகொண்டு மாரி செல்வராஜை பாராட்டி உரையாற்றினார். அண்மையில் திராவிடர் கழகம் சார்பில் 'பெரியார் விருது' வழங்கப்பட்ட விழாவில் மாரி செல்வராஜ் பேசும்போது, திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் சீமானையும், தவெக தலைவர் விஜயையும் கடுமையாக விமர்சித்தார். இந்த பேச்சுக்கு தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக நிர்வாகிகள் கூறுகையில், "நீண்ட காலமாக திமுகவுடன் இருந்த பட்டியலின வாக்கு வங்கி மற்றும் இளைஞர்கள் வாக்குகள் தற்போது தவெக பக்கம் சாய்ந்து வருவதாக சர்வேக்கள் காட்டுகின்றன.

குறிப்பாக தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுகளை தக்கவைக்க கட்சியிடம் ஈர்ப்பான முகங்கள் இல்லை. ஆனால் மாரி செல்வராஜின் படங்கள் (பாரி, மாமன்னன், பைசன்) அந்த சமூக மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளன. எனவே அவரை மறைமுக பிரசாரத்திற்கு பயன்படுத்த தலைமை முடிவு செய்துள்ளது" என்றனர்.

இதன் தொடர்ச்சியாக தென் மாவட்டங்களை மையமாக வைத்து இலக்கியம், சினிமா, சமூக நிகழ்ச்சிகள் சார்ந்த மேடைகளை மாரி செல்வராஜுக்கு ஏற்பாடு செய்து, அவரது பேச்சுகள் மூலம் திமுகவுக்கு ஆதரவு பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவெகவுக்கு எதிரான மறைமுக தாக்குதலாகவும் பார்க்கப்படுகிறது. திமுக தலைமை இந்த உத்தியால் தென் மாவட்டங்களில் பட்டியலின வாக்குகளை மீட்டெடுக்க முயல்வதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க: பாமக ராமதாஸா? வேண்டாமே? 2011 போல ஆகிட போகுது! தயக்கம் காட்டும் ஸ்டாலின்! கைவிரித்த திமுக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share