×
 

தீவிரவாதிகளாக சித்தரித்த தீய சக்தி... விஜயுடன் தொடர்பு வேண்டாம்..! இஸ்லாமிய அமைப்பு அதிரடி..!

அவர்களின் கடந்த காலத்தின் அசிங்கமான முகத்தை மறைக்கவும் சிலர் இப்தார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ரமலான் நோன்பையொட்டி நடிகர் விஜய் கடந்த மார்ச் 7 ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் அதைத் தொடர்ந்து நடைபெற்ற தொழுகையிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வஃக்பு மசோதாவுக்கு எதிராக விஜய் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்திருந்தார்.

இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத் விஜய்க்கு எதிராக உருது மொழியில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ''ஆலம் சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்கள், முஃப்திகள் பின்வரும் பிரச்சினை குறித்து என்ன சொன்னார்கள்? விஜய் என்ற தளபதி ஒருவர் இருக்கிறார். அவர்கள் முதலில் திரைப்படத்தில் பணியாற்றினார். அதில், முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க வைத்தார். 

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி உருவானது எப்படி.? விஜய்யை வைத்து பின்னணியில் நடந்த அரசியல்.. அம்பலப்படுத்திய குருமூர்த்தி!

இப்போது அவர் அரசியல் ரீதியாக அமைப்பாக மாற்றி விட்டார். விஜய்  தனது ரமலான் இப்தார் நிகழ்ச்சிக்கு குடிகாரர்களையும், சூதாட்டக்காரர்களையும் அழைத்து வந்தார். இப்போது முஸ்லிம்கள் தங்கள் பிம்பத்தை மேம்படுத்த விரும்புகிறார்கள். முஸ்லிம்கள் இவர் போன்றவர்களுடன் பழக வேண்டுமா இல்லையா என்பதுதான் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

வந்தது. பதில் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னணி  முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தவும், அவர்களின் கடந்த காலத்தின் அசிங்கமான முகத்தை மறைக்கவும் சிலர் இப்தார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் முஸ்லிம்களிடையே சென்று அனுதாபம் தெரிவிக்கின்றனர். 

ஆனால் உண்மையில் அத்தகையவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள். முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் ஏமாற்று வேலைகளைசெ ய்கிறார்கள். முஸ்லிம்கள் அத்தகையவர்களிம் இமிருந்து விலகி இருக்க வேண்டும். அவர்களை தங்கள் கூட்டங்களுக்கு அழைக்கக்கூடாது. நோன்பு நோற்பவர்கள் மட்டுமே நோன்பின் போது உலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும். நோன்பின் போது தீய சக்திகளை அழைப்பதும் சூதாடுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அது ஒரு பெரிய பாவமாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக, எனக்குத் தெரியும்'' என அதில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் போட்டியிட காசில்ல… புதுவைக்கு குறிவைத்த தவெக - விஜய் எடுத்த முடிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share