×
 

சிவாக்கு இருக்க தைரியம் உங்களுக்கு இல்லையா தலைவா ..? இது அரசியல் கேள்வியா ..? ரஜினியை வறுத்தெடுக்கும் மக்கள் ..!

நான் ஒருவாட்டி சொன்னா நூறுவாட்டி சொன்னமாரி என சினிமா வசனம் போல் அரசியல் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாது என்று தெரிவித்து இருக்கிறேனே ஏன் திரும்ப திரும்ப அரசியல் கேள்வி கேட்கிறீங்க என்று காட்டமாக பதில் அளித்துள்ளார் ரஜினிகாந்த்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது . அண்ணா பெயர் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படி ஒரு துயரம் நிகழ்ந்துள்ளது குறித்து எதிர்க்கட்சிகளான அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசுக்கு போராட்டங்களை செய்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தை நிகழ்த்தினார் .பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சௌமியா அன்புமணி போராட்டத்தில் ஈடுபட்டு வள்ளுவர் கோட்டத்தையே அல்லல் பட வைத்தார்.

பிரதான எதிர் கட்சியான அதிமுக யார் அந்த சார் என கேள்வி எழுப்பி சட்டப்பேரவை வளாகத்தையே புரட்டி எடுத்தனர் .திரைத் துறையில் முதல் ஆளாக வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நாம் நிற்க வேண்டும் என்று தைரியமாக பேசியிருக்கும் நிலையில்,சிஸ்டம் சரியில்லை நான் அரசியலுக்கு வர வேண்டிய நேரத்தில் வருவேன் என கம்பீரமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு காட்டமாக பதில் அளித்து சென்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறுகிறது இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பினர் .அதற்கு பதில் அளித்த அவர் 70% படப்பிடிப்பு முடிந்து விட்டது வரும் 13-ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை பேங்க் ஆக்கில் படப்பிடிப்பு உள்ளது அதில் கலந்து கொள்ள செல்கிறேன் என புன் சிரிப்புடன் கூறினார் . அடுத்த நொடியே செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் டென்ஷன் ஆகி அங்கிருந்து பரபரப்புடன் கிளம்பி சென்றார். அண்ணா பல்கலை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்க நான் அரசியல் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறேனே என்று காட்டமாக தெரிவித்துவிட்டு விமான நிலையத்திற்குள் சென்று விட்டார் ரஜினிகாந்த்.

தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது சிஸ்டம் சரியில்லை வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என நீண்ட காலமாக அரசியல் ஆசையை அவரது தொண்டர்கள் மத்தியில் விதைத்த ரஜினிகாந்த் திடீரென அரசியலே வேண்டாம் ஆன்மீக அரசியலை கீழே போட்டு விட்டேன் என்று அவரது தொண்டர்கள் இதயத்தில் இடியை இறக்கியபோது அனைவரும் கலங்கிப் போனார்கள் இப்பொழுது தமிழகமே கொந்தளித்த சம்பவமான அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு குரல் கொடுக்காமல் ரஜினிகாந்த் சென்றிருப்பது அவர்களது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

இதையும் படிங்க: "அந்த சார்" கண்டிப்பாக ஒரு "அரசியல்வாதி" தான்..குண்டை தூக்கிப்போட்ட இசையமைப்பாளர் தீனா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share