×
 

"திமுக கூட்டணியில் இணைய தயார்! - திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இணையத் தயாராக இருக்கி்றேன் என்று திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வேளையில், TVK-க்கு பெயரில் ஒற்றுமையோடு இருக்கும் 'திராவிட வெற்றிக் கழகம்' (DVK) கட்சியின் தலைவர் மல்லை சத்யா அவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தனது கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்த அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணையத் தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார்.

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே கட்சியின் விருப்பம் என்றும் மல்லை சத்யா தெரிவித்தார்.  மதிமுக மீண்டும் திமுகவுடன் இணைந்து பணியாற்றுவதைப் போல, தனது தாய் கழகமான திமுகவின் வெற்றிக்குத் தொண்டாற்றத் தயாராக இருப்பதாகவும், வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) மற்றும் 'திராவிட வெற்றிக் கழகம்' (DVK) ஆகியவற்றுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன; தேர்தல் ஆணையம் கூடுதல் ஆவணங்கள் கேட்டால் வழங்கத் தயாராக உள்ளோம் என்று பெயர்ப் சர்ச்சை குறித்து விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: 150 நாள் வேலை வாக்குறுதி என்னாச்சு? - திமுகவின் 'பச்சை துரோகத்தை' விமர்சித்த இபிஎஸ்!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அல்லது திமுகவின் முன்னணித் தலைவர்களை இதுவரை தான் சந்திக்கவில்லை என்று மல்லை சத்யா தெளிவுபடுத்தினார். "திமுக என்னைப் பின்னிருந்து இயக்குகிறது என்று வைகோ அவர்கள் குற்றச்சாட்டு வைப்பதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் யாரையும் சந்திக்கவில்லை" என்று அவர் காரணத்தைக் கூறினார். 

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் முதல்வரைச் சந்தித்துத் தங்களது கோரிக்கையை முன்வைக்கப் போவதாகவும், அவர் தங்களுக்கு வாய்ப்பளிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கொடியின் சிறப்புகளை மல்லை சத்யா விவரித்தார்:

கொடியில் 3 பாகம் சிவப்பு மற்றும் 1 பாகம் கருப்பு நிறம் இடம் பெற்றுள்ளது. கொடியில் உள்ள 7 நட்சத்திரங்கள் திராவிட மற்றும் உலகளாவிய கருத்தியல் தலைவர்களைக் குறிக்கின்றன.

சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர், நடேசனார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் சமூக நீதித் தலைவர் அம்பேத்கர் மற்றும் உலகப் புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் ஆகியோரை இந்த நட்சத்திரங்கள் குறிக்கின்றன.

இதையும் படிங்க: இருமொழி என்று வெளிவேஷம் போடுகிறது திமுக அரசு - இபிஎஸ் கண்டனம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share