×
 

கண்ணீர் விட்டு காரியத்தை சாதித்த துரை வைகோ... திமுக சதி வலையில் இருந்து தப்பிய மதிமுக...!

6 ஆண்டுகளாக ஒரு கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் பொதுத் தேர்தல்களில் போட்டியிடாவிட்டால், அக்கட்சியின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தேர்தல் ஆணைய விதிமுறைகள் 29 (a)-ன் படி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, 6 ஆண்டுகளாக ஒரு கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் பொதுத் தேர்தல்களில் போட்டியிடாவிட்டால், அக்கட்சியின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

மதிமுகவைப் பொறுத்தவரை, கடந்த 1996-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்து வருகிறது. அந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் மதிமுகவுக்கு குடை சின்னத்தை ஒதுக்கியிருந்தது. அதன்பிறகு, 1998-ம் ஆண்டு தேர்தலின்போதுதான், மதிமுகவுக்கு முதன்முறையாக பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. 1998 முதல் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தல் வரை மதிமுக பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட்டு வந்தது. அக்கட்சி 2011-ம் ஆண்டு தேர்தலில் பங்கேற்கவில்லை.

2016-ல் மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் தேர்தலைச் சந்தித்தபோது அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டது. கடந்த 2019 ஜூலையில் நடந்த ராஜ்யசபாவுக்கான தேர்தலில், வைகோ மதிமுக சார்பில் தான் போட்டியிட்டிருந்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் காரணமாகவும், தங்களது பதிவை மீளமைக்கவும் மதிமுக இம்முறை பம்பரம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தது.

இதையும் படிங்க: மல்லை சத்யாவுக்கு அவ்ளோ தான் டைம்... கெடு விதித்த வைகோ! பதில் சொல்லலனா...

திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அத்தொகுதியில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய துரை வைகோ "செத்தாலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்" என்று கண்ணீர் மல்க பேசியிருந்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

அதேநேரத்தில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் பம்பரம் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னத்தை மதிமுகவிற்கு ஒதுக்க முடிவெடுத்தது. அதன்படி துரைவைகோ தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்து போட்டியிட்டு, மக்களவை தேர்தலில் வெற்றியும் பெற்றார். அன்று துரை வைகோ எடுத்த அதிரடி முடிவால் இன்று மதிமுக கட்சி அங்கீகாரத்தை இழக்கும் மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து தப்பியுள்ளது. 
 

இதையும் படிங்க: #BREAKING: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா சஸ்பெண்ட்! வைகோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share