"உங்க பையன் துரைமுருகன்"..! 11 முறை ஜெயிச்ச பெருமை கிடைக்கும்..! காட்பாடியில் பரப்புரை..!!
காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பரப்புரை மேற்கொண்டார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் திமுக மும்முரமாக பணியாற்றி வருகிறது. வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர்.
உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற திமுக வேட்பாளர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.
அதனை தொடர்ந்து அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய துரைமுருகன் கூறியதாவது, என்னைச் சாட்டையெடுத்து பந்தாடியவர்கள் பல பேர். ஆனால், அத்தனையும் தாங்கிக்கொண்டு இந்தச் சமுதாயத்திலே, இன்றைக்குக் கட்சியினுடைய பொதுச் செயலாளர் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம். இந்தத் தேர்தல்ல உங்ககிட்ட எல்லாம் பணிவன்புடன் கேட்கிறேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!
இந்தத் தேர்தல்ல நான் ஜெயிச்சாக்கா... இந்தியாவிலேயே 11 தடவை ஜெயிச்சவன் துரைமுருகன் தான் என்றார். இந்தியாவிலேயே... இந்த ஊர்ல இல்ல, இந்த இந்தியாவில உங்க பையன்... உங்க பையன்... உங்க பையன்... ரத்தத்தின் ரத்தம் என்று தன்னைக் குறிப்பிட்டு பேசினார். நான் இந்தியாவிலே கொடிகட்டப் போறேன். அதைப் பார்த்து நீங்க சந்தோஷப்படுங்க... மகிழ்ச்சிப்படுங்க என்றார். இந்த ஒன்றைச் செய்தீர்களானால், பரவாயில்லை... உங்களுக்கு இரண்டாவது யார்டா இவ்வளவு தூரம் போனவன் என்றால் உங்களுக்குத்தான் பெருமை என்றும் இந்த பையன் ஜெயிச்சுட்டான் உரிமை கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: உள்துறைச் செயலாளர் மாற்றம்..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்..!!