×
 

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு அவருக்கு; அதிர்ச்சியில் திமுக!!

திமுகவின் மூத்த தலைவரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். திமுகவின் மூத்த நிர்வாகியான இவர், திமுகவின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 86 வயதான இவருக்கு கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவர் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும், அதன்பிறகு குணமாகி வீடு திரும்புவதும் நடந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் கூட துரை முருகன் சென்னையில் இருந்தபோது உடல்நல குறைவு ஏற்பட்டது. அப்போது அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்திலும் துரைமுருகன் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமாகி வீடு திரும்பினார். அதன்பிறகு தொடர்ந்து கட்சி மற்றும் அரசியல் பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஜூன் 19ல் ராஜ்ய சபா தேர்தல்.. இபிஎஸ் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்!

இதையடுத்து துரைமுருகன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் துரைமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு, துரைமுருகன் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. துரைமுருகனுக்கு இன்னும் 2 அல்லது 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடும் காய்ச்சல் மற்றும் இருமலால் அவரும் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது உதயநிதி ஸ்டாலின் குணமாகி வரும் நிலையில் அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக வெற்றிக் கழகத்தின் தனிச்சிறப்பே இதுதான்... கடுமையாக சாடிய திவ்யா சத்யராஜ்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share