×
 

மக்களை பயமுறுத்துறாங்க!! SIR விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பகீர்!

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில், அரசியல் கட்சிகள் வாக்காளர்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன' என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SSR) விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பெரிய திருப்பம்! “அரசியல் கட்சிகள்தான் தேவையில்லாமல் மக்களை அச்சத்தில் ஆழ்த்துறாங்க, தவறான தகவல்களை பரப்புறாங்க” என்று தேர்தல் கமிஷன் நேரடியாக குற்றம் சாட்டியது. திமுக, காங்கிரஸ், மதிமுக, வைகோ, கேரளா-மேற்குவங்க அரசுகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிசம்பர் 4-ம் தேதி இறுதி விசாரணை நடத்தும் என்று அறிவித்தது.

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி 99% முடிந்துவிட்டதாகவும், 50%க்கும் மேல் டிஜிட்டல் முறையில் விண்ணப்பங்கள் பதிவாகிவிட்டதாகவும் தேர்தல் கமிஷன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தெரிவித்தார். 

“டிசம்பர் 4-க்கு மேல் எந்த விண்ணப்பமும் பெறப்படாது” என்று கமிஷன் ஏற்கனவே சொல்லிவிட்ட நிலையில், “இதை உடனே நிறுத்தணும்” என்று திமுக தரப்பில் அவசர விசாரணை கேட்டது. ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.

இதையும் படிங்க: அமெரிக்காவை காப்பாத்தவே முடியாது!! ட்ரம்புக்கு எதிரான வழக்கு!! அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வாதம்!

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், “அவசர அவசரமாக பணி நடக்குறதால, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தற்கொலை செய்துகிறாங்க. அசாமில் படிவம் தேவையில்லைனு சொல்றாங்க, மற்ற மாநிலங்களில் வேற மாதிரி உத்தரவு கொடுக்குறாங்க. கமிஷன் ஒரே மாதிரி நடந்துக்கல” என்று கடுமையாக விமர்சித்தார். 

இதற்கு பதிலடி கொடுத்த தேர்தல் கமிஷன் வழக்கறிஞர், “அரசியல் கட்சிகள்தான் மக்களை பயமுறுத்துறாங்க. உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி அரசியல் செய்யுறாங்க” என்று நேரடியாக சாடினார்.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், வைகோ உள்ளிட்டோர் “லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படப்போகுது” என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் தேர்தல் கமிஷன் “99% பணி முடிந்துவிட்டது, எல்லாம் வெளிப்படையாகவே நடக்குது” என்று உறுதியாக சொல்கிறது.

டிசம்பர் 4-க்கு மேல் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்குமா? இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு தமிழக அரசியலை புரட்டிப் போடுமா? அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் பெரிய சண்டை வரப்போகுது!

இதையும் படிங்க: 20 லட்சம் வாக்காளர்கள் எங்கே? SIR விவகாரம்!! திணறும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share