பா.ம.க. உட்கட்சி மோதல்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி மறுஆய்வு மனு!
பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைமை மற்றும் சின்னம் தொடர்பானத் தந்தை-மகன் இடையிலானச் சட்டப் போராட்டத்தில் ஒரு புதியத் திருப்பமாக, இந்தியத் தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அன்புமணியின் பதவிக்காலம் 2025 மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது; அவர் போலி ஆவணங்கள் மூலம் தன்னைத் தலைவராகக் காட்டிக்கொண்டுத் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியுள்ளார் எனத் ராமதாஸ் குற்றம் சாட்டினார். கட்சியின் ஆவணங்களின்படி, 2026 ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை அன்புமணி ராமதாஸேத் தலைவராகத் தொடர்வார் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து மருத்துவர் ராமதாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்னா, கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி வழங்கியத் தீர்ப்பில் தெரிவித்ததாவது,
“பா.ம.க. ஒரு அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாதக் கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களிலும், உரிமைக்கோரல் விவகாரங்களிலும் தலையிட்டு முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு எவ்வித அதிகாரமும்இல்லை. கடிதங்களின் அடிப்படையிலோ அல்லது ஒரு தரப்பின் கருத்தைப் பெற்றோ தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இரு தரப்பும் உரிமையியல் நீதிமன்றத்தை (Civil Court) தான் அணுக வேண்டும்.”
இதையும் படிங்க: பாமக இளைஞரணி பொதுக்குழு! சென்னையில் பிப். 10-ல் அன்புமணி பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம்!
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புத் தனது அதிகார வரம்பைக் கட்டுப்படுத்துவதாகக் கருதிய இந்தியத் தேர்தல் ஆணையம், தற்போது அதே நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பு மற்றும் கட்சிகளின் நிர்வாகப் பதிவுகளைப் பராமரிப்பதில் உள்ளச் சிக்கல்கள் குறித்துத் தெளிவுபடுத்தவே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த மறுஆய்வு மனு, நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் இன்று (பிப்ரவரி 9, 2026) விசாரணைக்கு வர உள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ம.க.-வின் 'மாம்பழம்' சின்னம் யாருக்குக் கிடைக்கும் என்பதில் நிலவும் இந்தச் சட்டச் சிக்கல் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூட்டணி கணக்குகள் தீவிரம்! பியூஷ் கோயலை சந்திக்கிறார் அன்புமணி!