×
 

கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது..! நான் தான் ஆல் ரவுண்டர்.. எடப்பாடி திட்டவட்டம்..!

தங்களது கூட்டணியை பொறுத்தவரை நான் சொல்வதுதான் என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் என்ற பெயரில் எதிர் கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று சிதம்பரத்தில் விவசாயப் பிரதிநிதிகள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் 12 ஆயிரம் கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்தார். கடினமான சூழ்நிலையிலும் விவசாயிகளுக்கான திட்டங்களை அதிமுக ஆட்சியில் செயல்படுத்தியதாகவும், ஆனால் அதிமுக திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது, விளம்பர மாடல் ஆட்சி என்று விமர்சித்தார். 1999ல் யாருடன் கூட்டணி வைத்தார் என்ற கேள்வி எழுப்பிய அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.

2001 பாஜகவுடன் தான் திமுக கூட்டணி வைத்தது., அப்போது ஏன் இவ்வாறு பேசவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். எங்களது கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா கூறிவிட்டார் என்றும் அதிமுக பாஜக கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி கிடையாது என்றார். எங்களது கூட்டணியை பொறுத்தவரை நான் சொல்வதுதான் என்று திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக, பாஜக கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்றுதான் கூறுகிறோம் என விளக்கம் அளித்தார்.

அரசு ஊழியர்கள் அரசுக்காக அரசியல்வாதியாக மாறிவிடக்கூடாது என்றும் ஓபிஎஸ் குறைத்து கேள்விக்கு, காலம் கடந்து விட்டதாக தெரிவித்தார். எனக்கு விவசாயம் தொழில் தான் உள்ளது, எனக்கென கம்பெனி எல்லாம் கிடையாது., வாழ்த்துக்கள் பிரச்சனைக்காக தான் டெல்லி செல்வோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: காத்துல கூட கரப்ஷன்..! பரபரக்கும் அரசியல் களம்.. பட்டைய கிளப்பும் இபிஎஸ்..!

இதையும் படிங்க: லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை... மக்கள் விரோத ஆட்சி... திமுகவை பந்தாடிய இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share