மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம்; மணமக்களுக்கு பட்டு சேலை, வேஷ்டி - அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட இபிஎஸ்...!
அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் தீபாவளிக்கு சேலை வழங்கப்படும்
ஆனைமலையில் மக்களிடையே உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் புரட்சி தமிழரின் எழுச்சி பயணம் என்ற பெயரில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று ஆனைமலையில் வாகனத்தில் இருந்தபடியே பரப்புரை செய்த அவர் பல்வேறு உறுதிமொழிகளை கொடுத்தவாறு சுமார் அரை மணி நேரம் பேசினார்.
அப்போது திமுக ஆட்சி அமைத்த பிறகு அம்மா மினி கிளினிக் திட்டம் நிறுத்தப்பட்டது. நாம் ஆட்சி அமைத்தால் 4000 அம்மா கிளினிக் கொண்டு வரப்படும். அம்மா கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவி திட்டம் என அனைத்தும் திமுக ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டது. நாம் ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் கொண்டுவரப்படும். மணமக்களுக்கு பட்டு சேலை வேஷ்டி வழங்கப்படும்.
லேப்டாப் வழங்கும் திட்டத்தையும் நிறுத்தியது திமுக அரசு, இதன் மூலம் 52 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெற்றிருக்கிறார்கள், இதற்காக சுமார் 7,300 கோடி அதிமுக அரசு செலவு செய்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட 7.5 % இட ஒதுக்கீட்டில் 2818 பேர் தேர்வாகி இன்று மருத்துவ கனவை நிறைவேற்றி உள்ளனர்.
இதையும் படிங்க: “சொன்னா புரியாதா? இத்தோட நிறுத்திக்கோங்க..” - விவசாயிடம் கடுகடுத்த இபிஎஸ்- கலந்தாய்வு கூட்டத்தில் சலசலப்பு...!
திமுக வை பொறுத்தவரைக்கும் கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் இதுவே திராவிட மாடல். திமுக ஆட்சி காலத்தில் அரசு பருப்பு என அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு. விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்திய அரசாங்கத்தை நாம் நடத்தினோம்.
ஏழை எளிய மக்களுக்கு தரமான காங்கிரீட் வீடுகள் கட்டி கொடுத்தோம். பொங்கலுக்கு சேலை வேஷ்டி கரும்பு என அனைத்தையும் கொடுத்தோம். ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு அதுவும் கிடைப்பதில் சிக்கல்.
தீபாவளிக்கு அனைத்து மகளுக்கும் சேலை வழங்கப்படும். 67% மின்கட்டன உயர்வு, வரி விதிப்பு என திமுக ஆட்சியில் அனைத்தும் உயர்த்தப்பட்டது. ஐசியுவில் நாங்கள் இல்லை. ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி மக்களிடம் கெஞ்சி உறுப்பினர்களை சேர்க்கும் திமுக ஆட்சி தான் ஐசியு வில் உள்ளது.
எந்த கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்களான நீங்கள் தான், அதை விட்டு அவர் கூட்டணி கூட்டணி என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். வ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைப்பது கொள்கை என்பது நிலையானது.
தென்னையில் வாடல் நோயை கட்டுபடுத்த அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சி காலத்தில் வால்பாறை எஸ்டேட் பகுதியில் சாலைகளை அமைத்தோம். படகு இல்லம், திடக்கழிவு மேம்பட்டு திட்டம், 100கும் மேற்பட்ட தடுப்பணைகள், ஆனைமலை புதிய தாலுக்காவாக உருவாக்கப்பட்டது.
ஆழியார் பகுதி சிறந்த சுற்றுலா தலமாக உருவாக்கப்படும். தேயிலை தோட்ட வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்., என உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: இபிஎஸ் பொதுச்செயலாளரா? சில விஷயங்கள் இருக்கு! ஓபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்...