பிரச்சாரப் பந்தலை கூட பிரிக்கல... மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை. ! முதல்வரை சாடிய EPS..!!
மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தனது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாக இன்றைய முதல்வர் பேசிய பிரச்சாரக் கூட்ட மேடையின் பந்தலைப் பிரிப்பதற்குள்ளேயே மதுராந்தகம் பகுதியில் ஒரு மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கும் அவலம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்று அவர் தெரிவித்தார். ஒரு சிறுமிக்கு தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத ஒரு பொல்லாத ஆட்சியை நடத்தும் இன்றைய முதல்வர், எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“அண்ணன், தாய் மாமன்” என்று தனக்கு பிராண்டிங் செய்துகொள்ளும் இந்த நடிப்பு முதல்வர், பாதிக்கப்பட்ட இந்த சிறுமிக்கு அண்ணனாகவோ, தாய் மாமனாகவோ இருந்தால் இப்படி ஒரு நிகழ்வை நடக்க விட்டிருப்பாரா என்று அவர் கேட்டார். ஆட்சி என்பது கவர்ச்சியான வார்த்தைகளால் நடத்துவது அல்ல, ஆட்சி என்பது செயல் என்று அவர் வலியுறுத்தினார். மதுராந்தகத்தில் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் கால் வைக்கப்போகும் முதல்வர், இதுபோன்ற கொடூர சம்பவங்களுக்கான விளக்கத்தை அளிப்பாரா? அல்லது வழக்கம் போல பிற கட்சிகளை நோக்கி வெறும் காற்றில் வாள் சுழற்றுவது மட்டும்தானா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
ரீல்ஸ் கண்டன்டுக்காக மட்டுமே ஆட்சியை நடத்தி, ரியல் ஆக்ஷனில் எதுவும் இல்லாத, தமிழகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பில் சமரசம் செய்துள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசுக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மதுராந்தகம் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மளமளவென பரவும் டெங்கு பாதிப்பு..! பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிடுக..! EPS வலியுறுத்தல்..!!