போராடி, வாதாடி வாங்கிய தீர்ப்பையே கர்நாடகா மதிக்கல.! இவர் போனா நடக்குமா.? முதல்வரை விளாசிய இபிஎஸ்.!!
தமிழக வெற்றிக்கான அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பயிர் கடன் தள்ளுபடி, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது கண்டன உரையாற்றிய அவர், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை என்று தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் கட்சி அதிமுக எனவும் குறிப்பிட்டார்.
ரிங்ஸ் போடுவதில் மட்டும் தமிழக அரசு கவனம் செலுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். காவிரியில் நமக்கு அளிக்க வேண்டிய நீரை தமிழக அரசு பெற்று தரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக வெற்றிக்கழக அரசு விவசாயிகள் மற்றும் மக்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்காததால் ஒரு லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் வறண்டு கிடப்பதாக தெரிவித்துள்ளார். ரிங்ஸ் போடுவது மட்டுமே தமிழக வெற்றி பெற அரசின் வேலையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். விவசாயிகள் உணவுக்கு வழி இன்றி உள்ள நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அரைமாற்றம் தான் முக்கியமா என்று கேட்டார். நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசு முதல்வர் விஜய் சென்று பேசினால் நீர் திறக்கும் என்பது நகைச்சுவை என்று கூறினார்.
இதையும் படிங்க: “அந்த விஷயத்துல எடப்பாடியார் தான் கெத்து...” - விஜய் மாஸ்டர் பிளானை மட்டையாக்கிய ஆர்.பி.உதயகுமார்...!
போராடி வாதாடி பெற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையே கர்நாடக மதிப்பதில்லை என்றும் பேச்சுவார்த்தை நடத்தினால் நீர் திறப்பார்களா என்றும் கேட்டார். 50 ஆண்டு காலமாக காவிரி விவகாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றும் அந்த வரலாறு தெரியாமல் தமிழகவற்றைக் கழக அரசு செயல்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். வேண்டுமென்று காலம் தாழ்த்துவதற்காகவே கர்நாடகா சென்ற பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில் தமிழக வெற்றிக்கான அரசுக்கு காவிரி வரலாறு தெரிய வாய்ப்பில்லை என்றார். கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழக அரசு கேட்கவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தலையில் இறங்கிய பேரிடி... அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி...!