×
 

செம்ம வைரல்...!! - இபிஎஸ் வாயை வாடகைக்கு எடுத்த திமுக ஐ.டி. விங்... தீயாய் பரவும் தேர்தல் பிரசார வீடியோ....!

திமுகவின் நலத்திட்டங்களை பட்டியலிட்டி எடப்பாடி பழனிசாமி பேசிய வீடியோவை திமுக உடன் பிறப்புகள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். 

வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த முறை வெறும் பொதுக்கூட்டங்களும், போஸ்டர்களும், பேச்சுகளும் மட்டும் போதாது என்று நினைக்கும் அரசியல் கட்சிகள் சோசியல் மீடியாவையும் தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. திமுக, அதிமுக, பாஜக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என எல்லா கட்சிகளுமே இந்த டிஜிட்டல் ரேஸில் குதித்துள்ளன.

சமீப காலமாக ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து வீடியோக்களை வெளியிட்டு வந்த திமுக, அதிமுக, தவெக கட்சியினர், தற்போது புது யுக்தியை கையில் எடுத்துள்ளனர். அதாவது தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது எதிர்க்கட்சியை விமர்சித்து கூறும் வார்த்தைகளை வைத்தே தங்களது கட்சிக்கான பிரச்சார வீடியோவை ரெடி செய்து வருகிறார்கள். 

அந்த வகையில் திமுகவின் நலத்திட்டங்களை பட்டியலிட்டி எடப்பாடி பழனிசாமி பேசிய வீடியோவை திமுக உடன் பிறப்புகள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். 

இதையும் படிங்க: தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசு..! ரொம்ப அலட்சியம்... EPS கண்டனம்..!!

அந்த வீடியோவில் திமுகவை விமர்சிப்பதற்காக ‘வெல்வோம் ஒன்றாக’ ‘எல்லோருக்கும் எல்லாமும்’  ‘ஓரணியில் தமிழ்நாடு’ ‘ஒன்றிணைவோம் வா’, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, ‘உங்களுடன் ஸ்டாலின்’ ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘இல்லம் தேடி கல்வி’, ‘நான் முதல்வன்’, ‘தமிழ் புதல்வன்’, ‘உங்கள் கனவை சொல்லுங்க’ என திட்டங்களை பட்டியலிட்டு விமர்சித்து பேசிய வீடியோவில் இருந்து, இபிஎஸ் திட்டங்களின் பெயரை வாசிக்கும் பகுதியை மட்டும் கட் செய்து “ஸ்டாலின் தொடரட்டும்”, “வாக்களிப்பீர் உதயசூரியன்” போன்ற ஹேஷ்டேக்குகளுடன் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது. 

என் contact ல மட்டும் அதுக்குள்ள 30 பேருக்கு மேல இந்த வீடியோ
whats app Status வச்சிருக்காங்க..#ஸ்டாலின்_தொடரட்டும் pic.twitter.com/0d41Emd3z2

— Jaya Kanagaraja (@Jayakanagaraja) February 26, 2026

இதையும் படிங்க: #BREAKING: அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.10,000...! ஜெ. பிறந்தநாளில் வாக்குறுதிகளை அள்ளிவீசிய EPS..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share