×
 

செங்கோட்டையன் ஆட்டம் குளோஸ்... அமித் ஷாவிடம் அந்த விஷயத்தை ஓபன் செய்யப் போகும் இபிஎஸ்...!

எப்படியும் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனிடம் நேரடி சமாதான பேச்சுவார்த்தைக்கு வருவார் என்ற அவரது எதிர்பார்ப்பு தவிடு பொடியானது தான்.

10 நாட்களுக்கு முன்பு அதிமுக ஒன்றாக இருந்தால் தான் வெற்றி பெறும். ஒருங்கணைக்கிற வேலைகளை செய்ய வேண்டும் எனக்கூறிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த நாளே அனைத்து விதமான கட்சி பதவிகளில் இருந்தும் அதிமுக பொதுச்செயலாளர் நீக்கம் செய்தார். அதன் பிறகு செங்கோட்டையன் ஹரித்துவார் போவது போல் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். 

இந்த நிலையில செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்களுடைய இனிய பிறந்த நாளில் மறப்போம் மன்னிப்போம் அப்படிங்கறதுதாங்க நம்மளுடைய தத்துவம். பிரிஞ்சவங்க எல்லோருமே ஒன்று சேரணும் அப்படின்னு மறுபடியும் அதையே வலியுறுத்துனாருங்க. ஆனா கொஞ்ம்  சுதி குறைஞ்சிருக்கு. அப்படியே சாப்ட் டோனுக்கு மாறி இருக்காரு. முன்னாடி இருந்த கொதிப்பு செங்கோட்டையனிடம் குறைந்து காணப்பட்டது. இதற்கு காரணம் ஆரம்பத்தில் அவருக்கு கிடைத்த பலம், அதிமுகவில் போக, போக குறைந்தது தான் என கூறப்படுது. 

ஆரம்பத்தில் 1000, 1500 பேர் செங்கோட்டையனுக்காக பதவி விலகவும் தயாராக இருந்தாங்க. ஆனால் அதனால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளராக இருந்த பவானி சாகர் எம்.எல்.ஏ. பண்ணாரியே, எடப்பாடிக்கு ஆதரவாக பல்டி அடித்துவிட்டார். காரணம், எப்படியும் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனிடம் நேரடி சமாதான பேச்சுவார்த்தைக்கு வருவார் என்ற அவரது எதிர்பார்ப்பு தவிடு பொடியானது தான். அதுமட்டும் இல்லீங்க, செங்கோட்டையனுக்கு அடுத்த படியா அவரது ஆதரவாளர்களையும் கட்சி பதவியில் இருந்து தூக்கியதில், பல ஆதரவாளர்களுடைய பல்ஸ் இறங்கிடுச்சு. 

இதையும் படிங்க: செல்லாக்காசு! யாரை சொல்றாரு இவரு? ஆர்.பி.உதயகுமார் பேச்சால் சர்ச்சை

இதனால் அதிமுகவில் இருந்து ஆதரவு சரிந்துவிட்டது. கடந்த 10 நாட்களாக செங்கோட்டையனை மீட் பண்ண ஆதரவாளர்கள் கூட ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உடைய ஆதரவாளர்கள் தான். செங்கோட்டையன் தங்களுக்காக வாய்ஸ் கொடுத்திருக்காருங்கிறதுக்காக மீட் பண்ணியிருக்காங்க. இதனால் செங்கோட்டையன் பெரிய பின்னடவை சந்தித்துள்ளது தெளிவாகியுள்ளது. இதுசம்பந்தமான ரிப்போர்ட்டை எல்லாம் கையில் எடுத்துக்கொண்டு தான் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை பார்க்கப்போகிறாராம். 

ஏனெனில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் பாஜக தரப்பும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த முறை அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையனும் ஒருங்கிணைந்த அதிமுக தான் தேர்தலில் வெற்றி பெற சரியான வழி எனக்கூறியதாக கூறப்படுகிறது. எனவே தற்போது செங்கோட்டையனின் நிலையை அமித் ஷாவிடம் எடுத்துச் சொல்லவுள்ள எடப்பாடி பழனிசாமி, அவரை கட்சியை விட்டு முழுமையாக நீக்குவது தொடர்பாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கும் திட்டம் இருப்பதால் தான் அவரை மெல்ல, மெல்ல கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டி வருவதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு! வாழ்த்து மழை பொழிந்த இபிஎஸ்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share