×
 

மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... பூரண உடல்நலம் பெற இபிஎஸ் பிரார்த்தனை...!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் முழுமையாக பூரண குணமடைய வேண்டும் என  கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் என மன்னார்குடியில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  "மக்களைக் காப்போம்" "தமிழகத்தை மீட்போம்" என்கிற பரப்புரை சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பெரியார் சிலை முன்பு பரப்புரை மேற்கொண்டார். அப்போது  இன்றைக்கு ஒரு திட்டத்தை அறிவிப்பார் ஒரு குழு அமைப்பார் அதோட முடிந்து போகிறது. இதுவரை 52 குழுக்கள் போட்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
திமுகவில் உறுப்பினர்கள் இல்லாமல் போய்விடும் என்று அச்சத்தில் வீடு வீடாக கதவைத் தட்டி உறுப்பினர் சேர்க்கையில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர் . 

திருமாவளவன் அவர்களே மக்களை சந்திப்பது தவறா  மக்களை பார்க்க கூடாது என்று சொல்ற ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. எங்கு  பாத்தாலும் போதை பொருட்கள் தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது மிகப்பெரிய கொடுமை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாலியல் தொல்லை எல்லாத்துக்கும் காரணம் இந்த போதை பொருட்கள் போதைப் பொருட்களால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது 

இதையும் படிங்க: மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின்.. ஃபோனில் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. திமுக ஆட்சி வந்த உடன் மணல் கொள்ளை அதிகமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டினார். 46 பிரச்சனைகள் மக்களுக்கு இருக்கான் இப்பதான் மக்களை பற்றி சிந்தித்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் நான்கு வருடமாக எங்கே சென்றார் மக்கள் ஏமாந்து விட வேண்டாம்   2026ல் அதிமுக பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரது உடல் முழுமையாக பூரண குணமடைய வேண்டும் என  கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்  தெரிவித்தார். 
 

இதையும் படிங்க: முதல்வருக்கு எதுவும் ஆகல.. அவரு நல்லா இருக்காரு.. அமைச்சர் துரைமுருகன் சொன்ன தகவல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share