×
 

அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி... பாஜக தலைமைக்கு பேரதிர்ச்சி...!

எடப்பாடி பழனிசாமி திருச்சி பிரச்சாரத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பெயரை குறிப்பிடாமல் உரையாற்றியுள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி யமைக்கும் என்று திட்டவட்டமாக கூறியுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி பிரச்சாரத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பெயரை குறிப்பிடாமல் உரையாற்றியுள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பயணிசாமி தான் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமைப்போம். ஆட்சியில் பாஜக பங்கேற்கும் என்று எனக்கூறிவருகிறார். 

இதனை விரும்பாத அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சில முன்னாள் அமைச்சர்கள் அமித் ஷாவின் கருத்தை நிராகரித்து வருகின்றனர். வர உள்ள தேர்தலில் நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்றும் தெரிவித்து வருகின்றனர். இதனையொட்டி, 'மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். ஒவ்வொரு கூட்டத்திலும் கூட்டணி கட்சி என்பதால் மத்தியில் ஆளும் பாஜக குறித்தும், பிரதமர் மோடி தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள திட்டங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற அமித் ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடாமல் தவிர்த்ததோடு, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என மீண்டும் ஒருமுறை அடித்துக்கூறியிருந்தார். இதனால் அதிமுக தரப்பு கடும் ஆப்செட்டில் உள்ளனர். இந்நிலையில் தான், திருச்சியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பெயர்களை தவிர்த்திருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: அரசியல் சண்டையில அவசர சிகிச்சைக்கு போறவங்கள தடுக்கலாமா? செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

அதுமட்டுமின்றி 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பானையுடன் ஆட்சி அமைக்கும் எனக்கூறியுள்ளார். அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி உருவான நாளில் இருந்தே கூட்டணி ஆட்சி, கூட்டணி ஆட்சி என அமித் ஷா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: அமித் ஷாவால் கன்பியூஸ் ஆன அதிமுக... ஒரே மேடையில் மாத்தி, மாத்தி பேசிய மாஜி அமைச்சர்கள் - கடைசியில் நயினார் சொன்ன ட்விஸ்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share