வாயில் வடை சுடுகிறாரா ஸ்டாலின்?... ஜெயலலிதா பாணியில் வெளுத்து வாங்கிய எடப்பாடி...!
அண்ணா திமுக ஆட்சி இருக்கும் போது நான் சட்டசபையில் அறிவித்தேன் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று சட்டம் இயற்றி கொண்டு வந்தேன் அது துவங்கப்பட்டது.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார் இந்த நிலையில் புவனகிரி சட்டமன்றத் தொகுதி சேத்தியாதோப்பு கடை வீதியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர் பின்னர் அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சியில் வேளாண்துறைக்கு என்ன செய்தோமோ அதை தான் திமுக ஆட்சியில் வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்குகிறார்கள் மக்களை ஏமாற்றும் திமுக அரசு தேவையா? விவசாயிகளுக்கு வேளாண் கருவி அதிமுக ஆட்சியில் மானியத்தில் கொடுத்தோம் திமுக அந்த ஆன்லைன்ல திட்டத்தை எடுத்துவிட்டு திமுக விவசாயிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு அந்த வேளாண் கருவிகளை கொடுக்கின்றனர் விவசாயிகளுக்கு கொடுப்பதற்கு கூட லஞ்சம் வாங்கிக் கொண்டு கொடுக்கும் ஒரே கட்சி திமுக கட்சி தான்.
அண்ணா திமுக ஆட்சி இருக்கும் போது நான் சட்டசபையில் அறிவித்தேன் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று சட்டம் இயற்றி கொண்டு வந்தேன் அது துவங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சாதி வாரி கணக்கெடுப்பு நாங்கள் எடுக்க முடியாது அது மத்திய அரசுதான் எடுக்கப்படும் என்று கூறினார்கள் அண்ணா திமுக ஆட்சி இருக்கும் பொழுது சாதிவாரி கணக்கெடுப்பு அறிவித்தேன் ஏன் திமுக ஆட்சியில் அதிகாரம் இல்லை என்று கூறுகிறார்கள்
திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டு ஆகிறது என்ன செய்தார் மத்திய அரசை குறை சொல்லி நான்கு ஆண்டு காலத்தை ஓட்டிவிட்டார். ஸ்டாலின் ஒரு திட்டத்தை கொண்டு வந்து பெயர் வைப்பது மட்டும் செய்வார் பெயர் வைப்பதில் மன்னன் ஸ்டாலின் பெயர் வைப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் ஸ்டாலினுக்கு கொடுக்கலாம். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து சாதனை செய்தது அவர் மகனை துணை முதலமைச்சர்ராக ஆக்கியது தான் அவர் செய்த சாதனை.
இதையும் படிங்க: பிரதமருக்கு வெள்ளை குடை... தமிழ்நாட்டில் வீராப்பு! யாரு கூட கூட்டணி வச்சா உங்களுக்கென்ன? இபிஎஸ் ON FIRE!
மின் கட்டணம், வீட்டு வரி, கடை வரி இப்படியெல்லாம் மக்கள் மீது வரியை சுமத்தும் அரசாங்கம் திமுக அரசாங்கம், தொடக்க வேளாண்மையில் விவசாயிகள் வாங்கிய கடனை இரண்டு முறை தள்ளுபடி செய்துள்ளோம் அண்ணா திமுக சாதனை. குடிமராத்து திட்டத்தை கொண்டு வந்தது அண்ணா திமுக. இந்த தொகுதியில் தான் அதிக தடுப்பணை கட்டிக் கொடுத்துள்ளோம். அதிக கல்லூரி கொண்டு வந்தது அண்ணா திமுக, கொரோனா காலகட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்று அறிவித்துள்ளோம் அதிமுக. மருத்துவ மாணவர்களுக்கு ஏழு புள்ளி ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது அதிமுக தான்.
பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்த அரசாங்கம் அதிமுக தான், செங்கரும்பு விவசாயியை வாழ வைத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம் . அனைத்து விவசாயிகளும் அண்ணா திமுக ஆதரவு கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புவனகிரி சட்டமன்ற தொகுதியில் நிறைய திட்டம் நிறைவேற்றியுள்ளோம் அருள்மொழித்தேவன் உங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார். புவனகிரி புதிய தாலுகா கொண்டுவரப்பட்டது கம்மாபுரம் தேவங்குடி இடையே உயர் மட்ட பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்று இவ்வாறு பேசினார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை கொலை செய்ய பாத்தாங்க..! பரப்புரையில் இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!