×
 

ஆண்டுக்கு ரூ.5,400 கோடி சுருட்டல் முதல் இன்பநிதி என்ட்ரி வரை - திமுகவை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி...!

தமிழகம் முழுவதுமே போதை பொருட்கள் விற்பனையால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி சாடல்

'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக விக்கிரவாண்டி வந்தடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே உரையாற்றிய போது திமுகவை கடுமையாக விமர்சித்தார். 

எல்லாருக்கும் மகளிர் உரிமை தொகை ஒரு கோடி நபர்களுக்கு கொடுத்தார்கள், முழுமையாக கொடுக்கவில்லை சட்டமன்ற தேர்தலை நோக்கி மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது மக்களை ஏமாற்றும் அரசாக உள்ளது. விலைவாசி விண்னை முட்டும் அளவிற்கு சென்றுவிட்டது அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

போதை பொருட்கள் விற்பனை ஆகாத இடமே இல்லை. வெட்க கேடான ஆட்சியாக திமுக உள்ளது.
தமிழகம் முழுவதுமே போதை பொருட்கள் விற்பனையால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் வழங்குவோம் என்றார்கள் ஆனால் வழங்காமல் பட்டை நாமம் போட்டு விட்டார்கள்,

இதையும் படிங்க: நான் அப்படி சொல்லல.. கண்ணு காது வெச்சு பேசுறாங்க.. எடப்பாடி விளக்கம்..!

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸாலின் அடுத்து இன்பநிதி வந்துவிட்டார் மன்னர் ஆட்சி தான் திமுக. திமுக ஆட்சியில் கலைக்‌ஷன், கமிஷன் கரப்பஷன் தான் பத்து ரூபாய்க்கு மதிப்பு வந்தது செந்தில் பாலாஜியால் தான் டாஸ்மாக்கால் ஆண்டுக்கு 5,400 கோடி வருமானம் பெற்று வருகிறது தமிழக அரசு. அமலாக்கத்துறை விசாரணை செய்து இதில் ஊழல் செய்தவர்கள் பெரிய திமிலங்கள் விரைவில் மாட்டுவார்கள் என்றார். 

உங்களுடன் ஸ்டாலின் நோட்டீசை எடுத்துகிட்டு வீடு வீடாக வருவார்கள் 4 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பிரச்சனைகள் குறித்து கேட்காமல் இப்போ கேட்க வருகிறார்கள் தேர்தல் வருவதால் மக்களை சந்திக்க வருகிறார்கள், கும்ப கரண தூக்கத்திலிருந்து ஸ்டாலின் எழுந்திருச்சி இருக்கிறார்.

மக்களை கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி வருவார்கள் மக்கள் ஏமாந்துவிட வேண்டாம் நடப்பது ஸ்டாலின் மாடல் அரசு அல்ல ஸ்பெயிலர் மாடல் அரசு என கடுமையாக விமர்சித்தார். 


 

இதையும் படிங்க: கொடுத்த காசுக்கு மேல கூவுறான்யா… இபிஎஸ்-ஐ கிண்டலடித்த ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share