×
 

நெல்லை பக்கம் பார்வையைத் திருப்பிய இபிஎஸ்.. அதிதீவிர பயத்தில் அதிமுக ர.ர.க்கள்...!

நெல்லை மாவட்ட அதிமுக அதிரடி மாற்றங்களை செய்யவில்லை என்றால் மறுபடியும் தோல்வி தான் மிஞ்சும்னு இபிஎஸ் கிட்ட தகவல் கொண்டு போயிருக்காம். 

நெல்லை மாவட்ட அதிமுக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகார மட்டத்திலோ, தேர்தல் வெற்றியிலோ பங்கெடுக்காமல் இருக்கின்ற நிலை தொடர்ந்து வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் முதல் சுற்றுகளுக்கு எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு கீழ போன அதிமுக, கடைசி ரவுண்ட்டில் ஒருவழியாக ஸ்டேடி ஆகி மூன்றாவது  இடத்தை பிடித்தார்கள். நான்காம் இடத்துக்கும் அதிமுகவுக்கும் வெறும் 2000 வாக்குதான் வித்தியாசம் இருந்தது. 

இதற்கு காரணம் அதிமுக மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா சரியா வேலை பார்க்காதது தான் என சொல்லப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் இந்த பிரச்சனை வெளிக்கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படலையாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த ஆர்ப்பாட்டத்தில கூட எதிர்பார்த்த அளவுக்கு கூட்டத்தை கூட்ட முடியாம சின்ன சின்ன பிரிவுகளா பிரிஞ்சு கிடந்திருக்காங்க நெல்லை மாவட்ட இரத்தத்தின் இரத்தங்கள். 

இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

இப்படி அதிமுக அணிகளா பிரிஞ்சதுனால அமமுகாவில் இருந்து போன முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் அமைச்சர் இசைக்கி சுப்பையான்னு தனித்தனியா ஒரு சின்ன டீம் வச்சு இயங்குறாங்களாம். ஆனா கட்சியை வளர்ப்பதற்காக எதுவும் செய்யவில்லையாம். இதை இபிஎஸ் கவனிக்காட்டி 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நெல்லையில் கொடி நாட்டுறது கஷ்டம்தான்னு புலம்ப ஆரம்பிச்சிருக்காங்களாம் அம்மாவட்ட அதிமுக நிர்வாகிகள். எனவே விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நெல்லை பக்கம் தன் பார்வையைத் திருப்ப போறாராம். 

இதையும் படிங்க: அதிமுக செய்த தவறு.. மின் கட்டணத்தை உயர்த்தாதீங்க.. ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி அட்வைஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share