மக்களை பாதுகாக்கும் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்ல.. திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்..!!
சென்னை எழும்பூரில் காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்திருப்பது திமுக ஆட்சியின் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராஜாராமன். 54 வயதான இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். வார விடுமுறை நாட்களில் நண்பர்களைச் சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ள ராஜாராமன், கடந்த 18ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, ராஜாராமனுடன், அவரது நண்பர்களான ராக்கி, அய்யப்பன் ஆகியோரும் மதுபோதையில் இருந்துள்ளனர். இந்நிலையில், ராஜாராமன் கிளம்பத் தயாரானபோது, அவருடன் ராக்கி, அய்யப்பன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராஜாராமனை கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட்டதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியை நார்நாராக கிழிக்க ‘உருட்டுகளும் திருட்டுகளும்’.. இபிஎஸ்-ன் அடுத்த மூவ்..!!
உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, ராஜாராமன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை எழும்பூர் போலீசார் கொலை வழக்காக மாற்றி, ராஜாராமனின் நண்பர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்திருப்பது திமுக ஆட்சியின் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது என்றும் காவல்துறையினர் தாக்கப்படுவது, ராஜினாமா செய்வது, காவல்துறை சீர்கேடுகள் குறித்து பொதுவெளியிலேயே தெரிவிப்பது என தொடர்ந்து வரும் செய்திகள் உணர்த்துவது ஒன்றைத் தான்- காவல்துறையை நிர்வகிக்க வக்கற்ற முதல்வராக இருக்கிறார் பொம்மை முதல்வர் ஸ்டாலின் என்றும் கடுமையாக சாடினார். மேலும் எஸ்.ஐ. ராஜராஜன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவை அக்கு, அக்கா பிரிச்சி போட்டுடுவாங்க... எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த திருமா...!