நினைச்சாலே நெஞ்சம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி... கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!
கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
கோவை கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவு சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட 43 மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதியம் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட 30 ஆண் குழந்தைகள் மற்றும் 13 பெண் குழந்தைகள் என மொத்தம் 43 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்களது பிள்ளைகளின் நிலை குறித்து அறிய பள்ளிக்குள் நுழைய முயன்ற பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து, துணை ஆணையர் சரவணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், “கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. 43 பிள்ளைகள் மருத்துவமனைப் படுக்கைகளில் சிகிச்சை பெறும் காட்சியை காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது.
இதையும் படிங்க: GAS தட்டுப்பாடு பிரச்சனை... அம்மா உணவகங்களில் கவனம் தேவை... EPS வலியுறுத்தல்..!!
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தும், சில ஊடகங்கள் இச்செய்தியை வெளியிடாமல் இருந்தது வருத்தமளிக்கிறது. மாணவர்கள் உயிர் விஷயத்தில், சத்துணவு போன்ற ஒரு முக்கியமான திட்டத்தில், எப்படி ஒரு அரசு தொடர்ச்சியாக அலட்சியப் போக்கு காட்ட முடியும்?
2021 முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தரமற்ற அரசுப்பள்ளி உணவால் பாதிக்கப்பட்டிருக்க, அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலையோ அக்கறையோ இல்லாமல், "சாம்பார் டேஸ்ட் எப்படி?" என மேடை போட்டு வெற்று விளம்பரம் செய்த வெட்கங்கெட்ட அரசு தானே இந்த ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு?
பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை இந்த திமுக மு.க.ஸ்டாலின் அரசு உறுதி செய்திட வேண்டும் . பள்ளி மாணவர்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கூட அக்கறையற்ற இந்த திமுக-வை, ஆட்சிக்கு அப்பால், அக்கரையில் மக்கள் சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: இன்று நிதிஷ்... நாளை இபிஎஸ்... பாஜக போடும் மெகா பிளான்... தாக்குப்பிடிக்குமா அதிமுக?