விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?
முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவது அனைத்து தரப்பு மக்களையும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.
முட்டை விலை இன்று ஒரே நாளில் 5 காசுகள் உயர்ந்தது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயம்.
முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.35 ல் இருந்து 5 காசுகள் உயர்த்தி
ரூ. 5.40 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (16-2-2026) மாலை அறிவித்துள்ளது.
இந்த விலை நாளை (17-2-2026) காலை முதல் அமலுக்கு வருகிறது. கடந்த 2 நாட்களில் 10 காசுகள் உயர்ந்துள்ளது. முட்டையின் நுகர்வும் , விற்பனையும் அதிகரித்துள்ளது பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள்.
இதையும் படிங்க: 134 படங்களின் பாடல்களுக்கு உரிமை கோர முடியாது..! இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!!
தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.
மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தற்போது தினசரி 1 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2026ல் கூட்டணி ஆட்சி உறுதி... அடித்துச் சொன்ன கிருஷ்ணசாமி... அதிர்ந்து போன அதிமுக...!