×
 

சட்டமன்ற தேர்தல்..! பணப்பட்டுவாடா.. அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்த நாதகவினர்..!!

ராஜபாளையத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்த புகாரில் அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

ராஜபாளையத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் செலவு தொடர்பான முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் பறக்கும்படை நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இந்தத் தேர்தலை முன்னிட்டு, மார்ச் 15 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே மாடல் கோட் ஆஃப் கண்டக்ட் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடங்கின.

தேர்தல் செலவு கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு முக்கிய அங்கமாக பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மூன்று பறக்கும்படைகள் என மொத்தம் ஆயிரக்கணக்கான அத்தகைய குழுக்கள் மாநிலம் முழுவதும் அமர்த்தப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் மட்டும் 48 பறக்கும்படைகளும் 48 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் மூன்று ஷிப்டுகளில் செயல்படுகின்றன.

இதையும் படிங்க: சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்ததை கையும் களவுமாக பிடித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளன

ர். 

இதையும் படிங்க: அது திமுக இல்ல.. கருணாநிதி முன்னேற்ற கழகம்..! பரப்புரையில் விளாசிய EPS..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share