இன்னும் டைம் இருக்காம்... அதிமுக விருப்ப மனு..! கால அவகாசம் நீட்டிப்பு...!
தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்கள் பெறும் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் சட்டமன்ற பொது தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முறமாக செய்து வருகின்றன. மக்கள் சந்திப்பு, பொதுக் கூட்டங்கள், செயற்குழு கூட்டங்கள் என முனைப்பு காட்டி வருகின்றன.
கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டு ஆட்சி அரியணையில் ஏறுவதை உறுதி செய்வதற்காக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் கொடுப்பதற்கான கால வரம்பை அதிமுக அறிவித்தது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டார். 2025 டிசம்பர் 15 ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உச்சத்தை விட்டு அரசியலுக்கு வருவது அவ்ளோ EASY இல்ல... விஜய்க்கு நடிகர் கிச்சா சுதீப் ஆதரவு...!
படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 25ஆம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டு வந்த நிலையில் மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதி முதல் 31ம் தேதி வரை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெறலாம் என அதிமுக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: TVK நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி...! பரபரப்பு...!