#BREAKING 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்... தமிழக அரசின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்...!
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி நிலவரப்படி, அதாவது படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது முதல் தமிழகத்தில் 77.52 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாகும். இதில் ஒன்றாம் தேதி வரை 6 கோடியே 36 லட்சம் கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அதாவது டிசம்பர் ஒன்றாம் தேதி நிலவரப்படி 5 கோடியே 18 லட்சம் கணக்கீட்டு படிவங்கள் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,72,000 ஆகும். தொடர்பு கொள்ள முடியாதவர்கள் 8 லட்சத்து 95,000, அதேபோல நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் 39 லட்சம் ஆகும்.
ஏற்கனவே பதிவேற்றம் செய்தவர்கள் அதாவது இரண்டு முறை வெவ்வேறு தொகுதிகளில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை என்பது 3.32 லட்சம், பிற காரணங்கள் 24 ஆயிரம் பேர் எனும் மொத்தம் 77 லட்சத்து 52,000 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் மொத்தம் 40 லட்சம் வாக்காளர்கள் இருக்கக்கூடிய நிலையில், இதில் 10 லட்சத்து நான்காயிரம் வாக்குகள் நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் எடுத்துக்கொண்டால் சென்னையில் இதுவரை 60 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
சென்னையில் இறந்தவர்கள், கண்டறிய முடியாதவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என மொத்தமாக எடுத்துக்கொண்டால் 25 சதவீதம் பேர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மொத்தமாக 82 சதவீதம் பேர் கணக்கிடப்பட்டிருக்க கூடிய நிலையில், 25 சதவீத வாக்காளர்கள் சென்னையில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதையும் படிங்க: #BREAKING தமிழகமே எதிர்பார்த்த சட்டமன்ற தேர்தல்... தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
குறிப்பாக வாக்காளர் பட்டியல் படிவங்களை திரும்ப கொடுப்பதற்கான தேதி 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வரைவு வாக்காளர் பட்டியல் 16 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இதில் தொடர்பு முடியாத நிலையில் இருக்கக்கூடிய 9 லட்சம் பேர் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் கொடுத்து டிசம்பர் 11ம் தேதிக்குள் பதிவு செய்யாவிட்டால் அவர்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாய்ப்புள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகும் கூட நிரந்தரமாக இடம் மாறியவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க அனுமதி தரப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: SIR - கால அவகாசம் நீட்டிப்பு..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!