ஞானேஷ் குமார் விவகாரத்தில் திமுகவுக்கு அழைப்பு? எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல்காந்தி திட்டம்?
தமிழகத்திலும் இந்த விவகாரம் அரசியல் கவனத்தை பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள புதிய சர்ச்சை டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில், தேர்தல் தொடர்பான சில முடிவுகள் குறித்து மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பலமுறை ஆட்சேபனைகளை பதிவு செய்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை இதுபோன்ற ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
குறிப்பாக வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்களை சேர்ப்பது மற்றும் பெயர்களை நீக்குவது தொடர்பான நடைமுறைகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வாக்காளர் தரவுகள் தொடர்பான சில முடிவுகள் குறித்தும் இரு ஆணையர்கள் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நடைமுறைகள் தொடர்பாகவும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்கள்?! தவெகவுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு!
தமிழகத்திலும் இந்த விவகாரம் அரசியல் கவனத்தை பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, தேர்தல் ஆணையம் தனது தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. ஆணையத்தின் முடிவுகள் மூன்று உறுப்பினர்களின் ஒருமித்த முடிவுகளாகவே கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்டதாகவும், ஆலோசனை நடைமுறையில் மாறுபட்ட கருத்துகள் தெரிவிப்பது இயல்பானது என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் தேர்தல் ஆணையம் தொடர்பான விவகாரம் தற்போது அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா என்பது டெல்லி அரசியலில் கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது.
இதையும் படிங்க: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்க தீர்மானம்? எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை!!