×
 

உடனே வாங்க... இபிஎஸ் அழைப்பு! திண்டுக்கல்லுக்கு விரைந்த அதிமுக முக்கிய தலைகள்!

எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்பை ஏற்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திண்டுக்கல்லுக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக தலைமை மீது அதீத அதிருப்தியில் செங்கோட்டையன் இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே, வெற்றி வாகை சூடுவதற்கு, நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் செங்கோட்டையம் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மனமகிழ்ச்சியோடு எதிர்காலத்தை நோக்கி மக்கள் நினைப்பதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.

அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்து உள்ள நிலையில், அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது. மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கி உள்ளார்.

அங்கு எஸ்.பி வேலுமணி, முனுசாமி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. செங்கோட்டையனுக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுக மூத்த தலைவர்களை திண்டுக்கல்லுக்கு வருமாறு எடப்பாடி பழனிச்சாமி அழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இபிஎஸ் அழைப்பின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திண்டுக்கல் விரைந்துள்ளார். இபிஎஸ் ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இபிஎஸ் திருந்த வாய்ப்பே இல்ல… கூட்டணியை கையாள தெரியாத நயினார்! சாட்டையை சுழற்றிய டிடிவி

செல்லூர் ராஜு தற்போது வரை மதுரையிலேயே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு தலைவர்கள் திண்டுக்கல் விரைந்துள்ள நிலையில், செங்கோட்டையனை தொடர்ந்து செல்லூர் ராஜூவும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. உசிலம்பட்டியில் நடந்த மூக்கையாதேவர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் செல்லூர் ராஜு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் பேசுனது தப்பு இல்ல! தொண்டர்கள் எண்ணத்தை தான் பிரதிபலித்தேன்... செங்கோட்டையன் விளக்கம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share