ரோபோ சங்கர் எப்படி வளர்ந்தாரு தெரியுமா? இபிஎஸ் உருக்கம்
ரோபோ சங்கர் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்தார்.
தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி உலகில் சிரிப்பின் ராஜாவாகத் திகழ்ந்த ரோபோ சங்கர், நேற்று இரவு நம்மை விட்டுப் பிரிந்தார். அவரது திடீர் மரணம் தமிழ் சினிமா மற்றும் ரசிகர்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதில் இழந்த இந்தப் பெரும் நட்சத்திரம், தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் ரோபோ போன்ற நடனத்தால் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்து நிற்கும்.
இளமை காலத்தில் இருந்தே நகைச்சுவை மற்றும் மிமிக்ரி கலைக்கு ஈடுபட்டார். கிராமப்புற நிகழ்ச்சிகளில் ரோபோ போன்ற நடனம் ஆடுவதன் மூலம் ரோபோ சங்கர் என்ற பெயரைப் பெற்றார். இது அவரது தனித்துவமான அடையாளமாக மாறியது. தொலைக்காட்சி உலகில் அவர் பிரபலமானது கலக்கபோவது யாரு நிகழ்ச்சி ஆகியவற்றில் அவரது ஸ்டாண்ட்-அப் காமெடி, உடல் மொழி மற்றும் மிமிக்ரி அனைவரையும் கவர்ந்தது.
இதனிடையே, பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ ஷங்கர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த ரோபோ சங்கரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு காரில் போய் சொகுசு காரில் வந்தீங்களே! என்ன இபிஎஸ் இதெல்லாம்? விளாசிய திமுக
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: FOOTAGE-ல் அப்படி தெரிஞ்சுருக்கு... இபிஎஸ்-ஐ விட்டுக் கொடுக்காத அண்ணாமலை..!