×
 

நெருங்கும் தேர்தல்... தொடரும் இழுபறி..! தொகுதி பங்கீட்டு பஞ்சாயத்தை முடிக்க டெல்லிக்கு பறந்த EPS..!!

தொகுதி பங்கீட்டு விவகாரத்தை முடிக்க எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இழுபறி தற்போது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக அணி தனது கூட்டணி பேச்சுவார்த்தைகளை வேகமாக முடித்து வரும் நிலையில், அதிமுக தலைமையிலான NDA அணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுகள் இன்னும் முழுமையடையாமல் தாமதமாகி வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முதன்மையான இழுபறி அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நிலவுகிறது. பாஜக தமிழகத்தில் தனது தேர்தல் இருப்பை வலுப்படுத்த விரும்புவதால், கடந்த தேர்தல்களை விட கணிசமாக அதிக தொகுதிகளை கோரி வருகிறது. பாஜக 45 தொகுதிகள் வரை கேட்டுள்ளதாகவும், ஆனால் அதிமுக அதை ஏற்க மறுப்பதாகவும் தெரிகிறது.

அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 29 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாகவும், மொத்தமாக சில சிறிய கட்சிகளுடன் சேர்த்து 38 வரை செல்லலாம் எனவும் பேச்சுகள் நடைபெறுகின்றன. ஆனால் இதில் இறுதி ஒப்புதல் இன்னும் எட்டப்படவில்லை.பாமக, அமமுக போன்ற கூட்டணி கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கோரி வருகின்றன. பாமக ஏற்கனவே அதிமுகவுடன் தனி ஒப்பந்தம் செய்துகொண்டு 18 முதல் 23 தொகுதிகள் வரை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அமமுகவுக்கு 9 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என பேச்சுகள் உள்ளன. 

இதையும் படிங்க: அதிமுக கோட்டைகளுக்கு குறிவைக்கும் அமித் ஷா... இன்று அவசரமாக டெல்லி விரையும் இபிஎஸ்... டீலை முடிக்க ரகசிய மீட்டிங்...?!

இந்த நிலையில், இழுபறி நீடித்து வரும் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார். பாஜக கட்சியுடன் சுமூகமாக தொகுதி பங்கீடு செய்து முடிக்கும் நோக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து அவர் பேச இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டில் தாமதம்..! அதிமுக வியூக வகுப்பாளர்களுடன் EPS அவசர ஆலோசனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share