×
 

சி.எம். விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... சட்டப்பேரவையை தெறிக்கவிட்ட ‘அந்த’ ஒற்றை வார்த்தை...!

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அந்தத் தீர்மானத்தை மட்டும் ஆதரிக்கிறேன்.

தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 

தற்போது நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு அரசியல் காரணங்களுக்காகப் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தத் தீர்மானத்தை எவ்வளவு அவசர அவசரமாக சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானமாகக் கொண்டு வருகிறது என்று நாங்கள் கருதுகிறோம்.

இதையும் படிங்க: நிதி கசிவு முதல் 13 லட்சம் காலிப்பணியிடங்கள் வரை..! தவெக அரசை கேள்விகளால் திணறடித்த EPS..!!

இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு கொண்டுவர உள்ள தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்குச் சாதகமாக உள்ளதா, பாதகமாக உள்ளதா என்பது பற்றி எதுவுமே தெரியாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக தமிழக வெற்றிக் கழக அரசு கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.

அதே நேரத்தில், இந்தத் தீர்மானத்தில், வரவிருக்கும் மக்களவைப் பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளுக்கான இடஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மானத்தை மட்டும், அதாவது நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அந்தத் தீர்மானத்தை மட்டும் ஆதரித்து அமர்கிறேன் எனக்கூறினார். 

இதையும் படிங்க: சி.வி. சண்முகம் ஏன் தோற்றார்.? இனி எடப்பாடி ஆட்சி தான்..!! அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share