நயினாருக்கு கல்தா கொடுத்த இபிஎஸ்... ஜே.பி. நட்டாவும் இப்படி கைவிரிச்சிட்டாரே... அதிர்ச்சியில் கமலாலயம்...!
தேசிய பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா பங்கேற்காததால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளும் தங்களது பரப்புரை பயணத்தைத் தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரிலான பயணத்தை, வரும் 12ஆம் தேதி, மதுரையில் இருந்து தொடங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியை, மதுரை - அண்ணா நகர், அம்பிகா திரையரங்கம் பகுதியில் நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ள மதுரை மாநகர காவல் துறை, பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. நிகழ்ச்சிக்கு வருவோருக்கு குடிநீர் வழங்க வேண்டும், பெண்கள், முதியவர்கள் வந்தால் போதிய வசதிகளை செய்து தரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள் பங்கேற்கக் கூடாது, சாலையின் இருபுறத்திலும் பதாகைகள் வைக்கக் கூடாது, சாலையின் நடுவே கொடிக் கம்பங்களை நடக் கூடாது, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 15க்கும் அதிகமான நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த தொடக்க நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக சமீபத்தில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பங்கேற்கவைத்தால் கூட்டணியின் பலமும், தொண்டர்களின் கூட்டமும் பெரும் என முடிவெடுத்த பாஜகவினர், நேரில் சென்று இபிஎஸுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதையும் படிங்க: 25 ஆண்டு கால வரலாற்று சாதனை... வாழ்த்துகள் மோடி ஜி! இபிஎஸ் உற்சாகம்...!
ஆனால், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொள்ளும் பரப்புரை பயண தொடக்க விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்கவில்லை என்றும், தேசிய பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா பங்கேற்காததால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநில தேர்தல் பணி காரணமாக ஜே.பி நட்டா தமிழகம் வர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், பாஜக பரப்புரை பயண தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று தொடங்கிவைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய வழக்கறிஞர்... பாராட்டி சர்ச்சையில் சிக்கிய பாஜக தலை!