இன்றும் நேர்காணலை தொடரும் இபிஎஸ்... சென்னைக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரம்...!
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் இபிஎஸ் இன்று நேர்காணல் நடத்துகிறார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியை வீழ்த்த வலுவான வேட்பாளர்களைக் களமிறக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக, கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான விருப்ப மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என கூறப்பட்டது. இதனிடையே ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நேர்காணலில் பங்கேற்க, மண்டலம் வாரியாக விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டனர். நேர்காணலில் பங்கேற்க வரும் வேட்பாளர்கள், தாங்கள் விருப்ப மனு அளித்ததற்கான அசல் ரசீதை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அதிமுக தலைமை அறிவுறுத்தியது. ரசீது இல்லாதவர்கள் நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு, தொகுதியில் அவர்களின் செல்வாக்கு, கட்சிப் பணி மற்றும் விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இந்த நேர்காணலை நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறார்.
இதையும் படிங்க: நிரந்தர டிஜிபி- ஐ நியமிக்க கூட வக்கில்லை... உயிரைப் பறிக்கும் களமா மருத்துவமனைகள்? இபிஎஸ் சரமாரி கேள்வி..!
நேர்காணலை முன்னிட்டு ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேர்காணல் நடத்தி வருகிறார். இதனிடையே 4வது நாளாக அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று நடக்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் இபிஎஸ் நேர்காணல் நடத்துகிறார்.
இதையும் படிங்க: சிறு தீங்கு நிகழ்ந்தாலும் ஸ்டாலினே பொறுப்பு... ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கைதுக்கு EPS கண்டனம்...!