×
 

சுற்றுப்பயணத்திற்கு தடை போட்ட காவல்துறை... எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு...!

நாமக்கல்லில் வரும் 9-ம் தேதி தனியாருக்கு சொந்தமான இடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். 

நாமக்கல் நகரில் வருகிற 9ம் தேதி, தனியாருக்கு சொந்தமான இடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரச்சாரம் நடைபெறுகிறது. வரும் 2026, சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த 20ம் தேதி, நாமக்கல், ப.வேலூரிலும், 21ம் தேதி, திருச்செங்கோடு, குமாரபாளையத்திலும் இ.பி.எஸ்., பிரச்சாரம் நடக்க இருந்தது. ஆனால், மழை காரணமாக அவரது சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கு பதில், அக். 5, 6 ல் பிரச்சாரம் நடக்கும் என, கட்சி தலைமை  அறிவித்தது. இந்த நிøயில், கடந்த, 27ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜய், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாமக்கல்லில், குறித்த நேரத்திற்கு விஜய் வராததாலும், கடும் வெயில் காரணமாகவும், 34 பேர் மயங்கினர். அதையடுத்து, கரூரில் நடந்த பிரச்சாரத்தின் போது, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள், பெண்கள் உள்பட, 41 பேர் பலியாகினர்.

இதையும் படிங்க: கரூர் சம்பவம் எதிரொலி… இபிஎஸ் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு! முக்கிய காரணம் தெரியுமா?

இது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து, சென்னை ஐகோர்ட் அரசியல் தலைவர்களின் பிரச்சாரத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொடர்ந்து, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை, எந்த கட்சிக்கும், ரோடு ஷோ மற்றும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படாது என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, நாமக்கல், மாவட்டத்தில், இ.பி.எஸ்., பிரச்சாரம் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள், நெடுஞ்சாலைகள் என்பதால், போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், தனியாருக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அதையடுத்து,  8-ம் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் சட்டசபை தொகுதிகளிலும்,  வியாழக்கிழமை, நாமக்கல் மற்றும் ப.வேலூர் தொகுதிகளிலும் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

நாமக்கல் நகரில் ஏ.எஸ். பேட்டையில், சில்ரன்ஸ் பார்க் பள்ளி அருகில் அமைந்துள்ள தனியார் இடம் பிரச்சாரத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வருகிற 9 ம் தேதி மாலை நடைபெற உள்ள பிரச்சாரக் கூட்டத்தில் இபிஎஸ் கலந்துகொண்டு, பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு பேசுகிறார்.

அதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி, நாமக்கல் நகர செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல்லில் பிரச்சார நிகழ்ச்சி முடிந்ததும், ப.வேலூர் சென்று அங்கு நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் இபிஎஸ் பேசுகிறார்.

முன்னதாக மாலை 5 மணியளவில் நாமக்கல் - சேலம் பிரதான சாலையில் கருங்கல்பாளையத்தில் அமைந்துள்ள ஜெயா பேலஸ் ஹோட்டலில் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க  பிரதிநிதிகளிடம் கலந்துரையாடுகிறார்.

இதையும் படிங்க: சகோதரி கண்முன்னே பெண்ணை வன்கொடுமை செய்த காவலர்கள்...! வெட்கக்கேடு... விளாசிய இபிஎஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share