×
 

எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!

அ.தி.மு.க., செயற்குழுவை கூட்டுவது குறித்து, அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.

அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் முக்கிய சந்திப்பு நடத்தினார்.

அப்போது பேசிய பழனிசாமி, “கட்சியிலிருந்து விலகிச் செல்வோர் போகட்டும். தொண்டர்களால் உருவான இந்தக் கட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெறுவோம்” என்றார். மேலும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளிடம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று அந்தத் தொகுதியை மீண்டும் தனது கோட்டையாக நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இன்று திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. வரும் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தஞ்சாவூர், சிவகங்கை, திருவள்ளூர், திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் தொடர் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதையும் படிங்க: முடிச்சுவுட்டீங்க போங்க!! காலியாகும் அதிமுக கூடாரம்! இதுவரை 32 சதவீத நிர்வாகிகள் ஓட்டம்!

கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தபடி, தேர்தல் ஆணைய விதிகளின்படி ஆண்டுக்கு இரு முறை செயற்குழு கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகஸ்டுக்குள் இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் பழனிசாமி இருக்கிறார். 

ஆனால், தற்போது செயற்குழுவை கூட்டினால் தனக்கு எதிரான குரல்கள் அதிகரிக்கும் என்பதால், முதலில் மாவட்ட நிர்வாகிகளுடன் தனிப்பட்ட ஆலோசனை நடத்தி தன் ஆதரவாளர்களை அடையாளம் காணும் உத்தியை கையாண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

கூட்டங்களுக்கு வராதவர்களை பதவி நீக்கம் செய்த பின்னர், நம்பிக்கையானவர்களை கொண்டு செயற்குழு கூட்டத்தை நடத்த பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் வரும் இடைத்தேர்தல்களில் கவனம் செலுத்தி கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த ஆலோசனை கூட்டங்கள் பார்க்கப்படுகின்றன.

தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பழனிசாமியின் இந்த நகர்வுகள் அ.தி.மு.க.வின் எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கடந்த 5 ஆண்டுகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்... யார் அந்த 4 பேர்..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share