×
 

அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதி கொடுப்பது தொடர்பாக குழு அமைத்து அறிக்கைகளை தயாரித்த வருகின்றனர். அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்டமாக ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை ஏற்கனவே கொடுத்திருந்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இரண்டாம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து இரண்டாம் கட்ட வாக்குறுதி பட்டியலை வெளியிட்டுள்ளார். முதியோர் உதவித்தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்யும் வகையில் அரசை ஏற்கும் என்று தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டின் போது வீரர் படுகாயம் அடைந்தால் இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்றும் மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 2026-27 பட்ஜெட்: இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்..!! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!!

தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் தலை குனியாது என்ற திமுகவின் பிரச்சாரம் குறித்து பேசியபோது, தமிழகம் தலைகுனியவில்லை என்றும் தலைதொங்கி விட்டதாகவும் நாள்தோறும் பாலியல் குற்றச்சாட்டு இல்லாத நாட்களே இல்லை என்றும் தெரிவித்தார். தாங்கள் வலுவான கூட்டணி அமைத்துள்ளதாகவும் தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். எந்தெந்த கட்சியுடன் எந்த கட்சி கூட்டணி வைத்துள்ளது என்பதை விஜய்க்கு தெரியவில்லை என்றும் வெளியேவே வராதவர் விஜய் என்றும் விமர்சனம் செய்தார். 

இதையும் படிங்க: கிரிமினல்களுக்கு ஆளுங்கட்சி அடைக்கலம்..! தீய சக்தி திமுகவை ஒடுக்குவோம்... இபிஎஸ் சூளுரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share