×
 

கிட்னி முறைகேடு... அது திமுக MLA ஹாஸ்பிட்டல்.. அதான் கண்டுக்கல... இபிஎஸ் விளாசல்...!

திமுக எம்எல்ஏவின் மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேடு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 25 குழந்தைகளை கொன்ற இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் தயார் செய்யப்பட்ட இருமல் மருந்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்தது என்று மத்திய பிரதேச அமைச்சர் குற்றம் சாட்டி இருந்ததையும் சுட்டி காட்டினார்.

இருமல் மருந்தால் பல குழந்தைகள் உயிரிழந்த பின்னரும் தாமதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தமிழக அரசு கண்காணிக்காததால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தில் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்றும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சோதனை செய்யாததே இருபத்தைந்து குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கிட்னி விவகாரத்தில் எந்தெந்த மருத்துவமனைகள் ஈடுபட்டது என விளக்கமாக கூறி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பேரவையில் அமைச்சர் மழுப்பலாக பதில் அளித்ததாகவும் தெரிவித்தார். சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது தமிழக அரசு என்றும் திமுக எம்எல்ஏவின் மருத்துவமனை என்பதால் கிட்னி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் கூறினார். யாரைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது தமிழக அரசு என்றும் தனிநபர் ஹைகோர்ட் கிளையை அணுகியதால் தான் கிட்னி முறைகேடு விவகாரம் தற்போது விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாங்க 10 வருஷத்துல வாங்குன கடனை நீங்க நாளே வருஷத்துல வாங்கிட்டிங்க.. அமைச்சருக்கு இபிஎஸ் பதிலடி…!

கிட்னி முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகரை தான் கைது செய்திருப்பதாகவும், மருத்துவமனை மீதி நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், முறையாக நெல் கொள்முதல் செய்யாததால் 30 லட்சம் மூட்டைகள் தேங்கியுள்ளதாகவும் டெல்டா மாவட்டங்களில் சுமார் 30 லட்சம் நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பின்றி சாலைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: கருப்பு பட்டையை கிண்டலடித்த சபாநாயகர்... என்ன SICK MINDSET இது? பந்தாடிய அதிமுக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share