×
 

சிங்காநல்லூர் கேட்கும் அண்ணாமலை! பல்லடம் தரும் எடப்பாடி! தேஜ கூட்டணியில் டொகுதி பங்கீடு இழுபறி!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டசபை தொகுதிதியில் போட்டியிடுமாறு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வலியுறுத்தி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி தொடர்கிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுமாறு பாஜக முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சு இன்னும் தொடங்கவில்லை. ஆனால் பழனிசாமி பாஜக - பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார்” என்றனர். 

தேமுதிக வராததால் பாஜக, பாமக அதிக தொகுதிகள் கேட்கின்றன. பாஜக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, தென் சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர் லோக்சபா தொகுதிகளுக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை குறிவைத்து கேட்கிறது.

இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டை இழுத்தடிக்கும் எடப்பாடி! அமித்சா டென்ஷன்! பேச்சுவார்த்தைக்கு தேதி குறிச்சாச்சு!

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி இம்முறை கோவை வடக்கில் போட்டியிடுகிறார். 2024 லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.

ஆனால் கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதி மட்டுமே தர முடியும் என்ற நிலையில், பழனிசாமி பல்லடம் அல்லது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியை மாற்றாக பரிந்துரைத்துள்ளார்.

சென்னை மாநகரில் குறைந்தது 4 தொகுதிகளை பாஜக கேட்கிறது. தென் சென்னை லோக்சபா தொகுதிக்குள் 2 தொகுதிகள் கோரப்படுகின்றன. முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். 

நேற்று முன்தினம் டெல்லி சென்ற அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரி, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து வேளச்சேரியை வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதிமுக விருகம்பாக்கம் அல்லது மயிலாப்பூர் தொகுதியை ஒதுக்க விரும்புவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால், தொகுதி பங்கீடு பேச்சு விரைவில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலை பல்லடத்தில் போட்டியிடுவாரா அல்லது அவரது விருப்பம் நிறைவேறுமா என்பது அரசியல் வட்டாரத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு விசிட்!! மார்ச் -11-ல் திருச்சி வருகை!! பம்பரமாய் வேலை பார்க்கும் பாஜக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share