எழுதி கொடுத்து படிக்க ஸ்டாலினா? மனசுல பட்டத பேசுற இபிஎஸ்! வலுக்கும் விமர்சனங்கள்
எழுதிக் கொடுப்பதை படிக்க ஸ்டாலின் இல்லை, மனதில் பட்டதை பேசுபவர் இபிஎஸ் என அதிமுக பதிலடி கொடுத்தது.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினை எப்ப பார்த்தாலும் ஸ்டாலின் பேசுறான் என்று இபிஎஸ் ஒருமையில் பேசி இருந்தார்.
கூட்டம் காட்டுவதற்காக குறுகிய முட்டுச் சந்துகளில் சுற்றித் திரியும் பழனிசாமி அரசியல் பாலபாடம் கற்கட்டும் என கூறியது. கூட்டணிக்கு ஆள் வராத விரக்தியில் வாயிக்கு வந்ததை உளரும் பழனிச்சாமிக்கு நாவடக்கம் தேவை என்றும் இல்லையென்றால் நாவடக்கம் செய்யப்படும் எனவும் எச்சரித்தது.மேலும், எழுதிக் கொடுப்பவர்களிடம் என்னவென்று கேளுங்கள், அறிக்கையெல்லாம் பிறகு பேப்பரில் எழுதி படிக்கலாம் முதலில் அரசியல் பாலபாடம் கற்றுக்கொள்ளுங்கள் பழனிசாமி என்று விமர்சனத்தை முன்வைத்தது. இந்த நிலையில், திமுகவின் விமர்சனத்திற்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.
கண்ணீரும், கதறலும் எப்போது கண்டனம் ஆனது எனவும் அய்யயோ எங்களை புண்படுத்திட்டாங்க என்று கதறும் கொத்தடிமைகள் எனவும் கூறியுள்ளது. 4 ஆண்டுகள் முதல்வராக இருந்த, 4.5 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி தாங்கள் பேசிய வார்த்தைகளை, வசைச் சொற்களை, அவதூறுகளை, ஆபாசங்களை எல்லாம் பார்த்தால், அவருடைய வழக்காடு மொழியில் மிக மரியாதையாக தான் நடத்தி வருகிறார் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமையட்டும்..! மீனவர்களுக்கு மாஸ் அறிவிப்பு கொடுத்த இபிஎஸ்..!
அது உங்களைப் புண்படுத்துகிறது என்றால் புண்பட்டுக்கோங்க என்று நக்கலடித்த அதிமுக, எழுதிக் கொடுத்தத அப்படியே படிக்க, ஆக... அவர் ஒன்றும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் அல்ல.,தன் மனதில் உள்ள கருத்தை, மக்களின் குரலாக, சமரசம் இன்றி பேசக் கூடிய மக்களின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: தோஸ்த் முறையில சொன்னோம்! வேணாம்னா விடுங்க.. திருமாவளவன் ஓபன் டாக்..!