×
 

தேமுதிக, ஓபிஎஸ், ராமதாஸ் வேணவே வேணாம்!! கேட்டை பூட்டிய எடப்பாடி! பாஜக சங்கடம்!

கூட்டணி நலனுக்காக, பழனிசாமி கொஞ்சங்கூட இறங்கி வராமல் இருப்பது, பா.ஜ. மேலிடத்தை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உள்ளே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி நலனுக்காக கொஞ்சமும் இறங்கி வராமல் பிடிவாதமாக இருப்பது பாஜக மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், தற்போதைய பேச்சுவார்த்தையின்படி பாஜகவுக்கு 30 தொகுதிகள், அமமுகவுக்கு 8, பாமகவுக்கு 18, தமாகாவுக்கு 5, இதர சிறிய கட்சிகளுக்கு தலா ஒன்று என ஒதுக்கீடு நடந்து வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 67 தொகுதிகள் வரை செல்லும் நிலை உள்ளது. மீதமுள்ள 167 தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிட முடியும். இது கடந்த தேர்தலை விட 12 தொகுதிகள் குறைவு.

கடந்த முறை பல கூட்டணி கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால் அதிமுகவுக்கு 191 தொகுதிகள் கிடைத்தன. ஆனால் இம்முறை தமாகா தனி சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது. சில கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றன. இதனால் அதிமுகவுக்கு தொகுதி எண்ணிக்கை இன்னும் குறையும் அபாயம் உள்ளது.

இதையும் படிங்க: மகனுக்காக முட்டி மோதிய பிரேமலதா! பிடிகொடுக்காத எடப்பாடி! தேஜ கூட்டணி கேட் க்ளோஸ்! தேமுதிக நிலை?!

தேமுதிக, ராமதாஸ் பாமக, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவற்றை கூட்டணியில் சேர்த்தால் அவர்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும். இதனால் அதிமுகவுக்கு மேலும் இடங்கள் குறையும். மேலும் அவர்களை சேர்த்தாலும் அதிமுகவுக்கு தனிப்பட்ட லாபம் இல்லை என்று பழனிசாமி கருதுகிறார். எனவே பாஜக எடுக்கும் முயற்சிகளுக்கு அவர் தடை போடுகிறார்.

பாஜக தரப்போ, தற்போதைய கூட்டணி வலுவாக இருந்தாலும் தேர்தல் வெற்றிக்கு போதாது என்கிறது. சிறிய கட்சிகளை இணைத்தால் தான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும். ராமதாஸ், பிரேமலதா, பன்னீர்செல்வம் ஆகியோரை கட்டாயம் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என பாஜக அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் பழனிசாமி "இனி யாரையும் சேர்க்க மாட்டேன்" என பிடிவாதமாக இருக்கிறார்.

ஒருவேளை பன்னீர்செல்வத்தை ஏற்றாலும் இரட்டை இலை சின்னம் தர மாட்டோம். தேவையானால் அவர் பழைய பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடட்டும் என பழனிசாமி நிபந்தனை விதிக்கிறார். இந்த பிடிவாதம் பாஜக மேலிடத்தை மிகவும் எரிச்சலடைய வைத்துள்ளது.

இதற்கிடையே தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா "கூட்டணி முடிவு இன்னும் எடுக்கவில்லை, விரைவில் நல்ல முடிவு அறிவிப்பேன்" என கூறி வருகிறார். ஆனால் திமுகவுடன் நடந்த ரகசிய பேச்சில் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியும் ஒதுக்க முடிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதனன்று பிரேமலதா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். 2011-ல் விஜயகாந்த் அதே கோவிலில் வழிபட்ட பிறகு அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார். அதேபோல தனக்கும் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் பிரேமலதா இந்த வழிபாட்டை மேற்கொண்டதாக கட்சியினர் கூறுகின்றனர்.

என்டிஏ உள்ளே இந்த மோதல் தொடர்ந்தால் 2026 தேர்தல் கணக்குகள் பெரிதும் பாதிக்கப்படும். பழனிசாமி இறங்கி வருவாரா? அல்லது பாஜக தனி முடிவெடுக்குமா? அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசியல் ஆட்டத்தில் கேம் சேஞ்சர் தேமுதிக!! எவ்வளவு தொகுதி? எந்த கூட்டணி? பிரேமலதா டிஸ்கஷன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share