நமக்காக பிரசாரம் பண்ணுறாங்க!! பிரேமலதாவுக்கு நன்றி!! உண்மை உறங்காது என அடித்து ஆடும் இபிஎஸ்!
சேலத்தில் இன்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ''திமுக கூட்டணியில் இருந்தாலும் நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி. எப்போதும் உண்மை உறங்காது,'' என்றார்.
தமிழக சட்டசபை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) கடுமையான அரசியல் விமர்சனங்களுடன் பேசினார். அவரது உரையில் திமுக அரசையும், அதன் தலைமையையும் குறிவைத்து பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவர் பேசியதாவது: “தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்துக்கும், தமிழக மக்களுக்கும் நடக்கும் தேர்தல் இந்த சட்டசபை தேர்தல். ஒரு குடும்பம் பிழைக்க 8 கோடி மக்களை வாட்டி வதைக்கிறார்கள். இந்த குடும்ப ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் முடிவுகட்டுங்கள். இந்த தேர்தல் கருணாநிதி குடும்பத்துக்கு மூடுவிழா நடக்கும் தேர்தல். அண்மையில் ஆ.ராசா ஆடியோ வெளியானது, கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஸ்டாலின் வீட்டுச்சிறையில் வைத்திருந்தார் என்று சொன்னார்.
ஏன் கோபம்? உங்க கட்சிக்காரர் சொன்னார் என்றால், அவரைக் கண்டியுங்கள். அவர் உண்மையைச் சொல்லியிருப்பார், இல்லையென்றால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? திமுக ஆட்சியில் கிட்னி திருடுறார்கள். திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் முறைகேடாக கிட்னி எடுத்தனர். இதெல்லாம் ஆட்சியா? மனிதாபிமானம் இல்லாமல் ஆட்சி நடக்கிறது. குமாரபாளையத்தில் ஒரு பெண்மணிக்கு கிட்னிக்கு பதிலாக கல்லீரலை எடுத்துவிட்டனர்.
இதையும் படிங்க: பாமகவில் நடக்கும் குழப்பத்திற்கு ஸ்டாலினும், சபரீசனும் தான் காரணம்! அன்புமணி பகீர் குற்ற்ச்சாட்டு!
உடல் உறுப்பை கொள்ளையைடிக்கும் அரசு தேவையா? திமுக 200 இடம் பெறும் என்கிறார்கள், 20 இடம் பெறுவதே ஆச்சர்யம். திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது. அதிமுக கூட்டணி 210 தொகுதிகள் வெல்லும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ஆட்சி அமைத்து மூன்றே மாதத்தில் போதை பொருள் ஒழிக்கப்படும். எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் 39 எம்பிக்கள் வெற்றி பெற்றோம் என்கிறார். அத்தனை பேரும் பெஞ்ச்சை தேய்க்கிறார்கள்.
100க்கு 100% திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது. திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். சேலம் மாவட்டம் 11 தொகுதியும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
100க்கு 100% வெற்றி பெற ஓட்டளியுங்கள். 10 ரூபாய் என்றால் உங்களுக்கே தெரியும். புது வித்தைகளைக் கண்டுபிடித்து ஊழல் செய்வதில் ஊழல் மன்னன் யார்? நல்லது செய்வதற்கு அமைச்சர்கள் செயல்பட வேண்டும்.எப்படியெல்லாம் கொள்ளையடிக்கலாம் என்று திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது.
உண்மை உறங்காது! திமுக பலம் வாய்ந்த கூட்டணி என்கிறார். உண்மை அதுவல்ல. ஏற்கனவே இருந்த அதே கூட்டணிதான், ஒரே ஒரு கட்சிதான் சேர்ந்திருக்கிறது. அன்புமணி சொன்னதுபோல் அவர் அங்கு போய் நமக்காக பிரசாரம் செய்கிறார். எப்போதும் உண்மை உறங்காது, தர்மம் தோல்வியடையாது. எதிரியிடம் போய் கைகோர்த்து நின்றாலும் உள்ளே இருக்கும் மனம் வெளிப்படுத்துகிறது, நமக்காக குரல் கொடுப்பதற்கு நன்றி.” இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
இந்த கூட்டம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய கடுமையான பேச்சுகள் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதையும் படிங்க: திமுகவுக்கு 20 தொகுதி கூட கிடைக்காது!! அடித்துச் சொல்லும் இபிஎஸ்!! எடப்பாடியில் இறுதிக்கட்ட பிரசாரம்!