ஜூலை 15ல் நேரில் ஆஜராகணும்!! முறைகேடு வழக்கில் எ.வ.வேலுக்கு சிக்கல்!
சாலை அமைக்காமல் ரூ.3.23 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் ஜூலை 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் சாலை அமைக்காமல் ரூ.3.23 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு வரும் ஜூலை 15-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலைப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் உட்பட பலர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஜூன் 25-ம் தேதி எ.வ.வேலு வீடு உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜூலை 3-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகக் கூறி ஆஜராகவில்லை.
இதையும் படிங்க: சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்!! விசாரணைக்கு வராத எ.வ.வேலு! அதிகரிக்கும் பரபரப்பு!
இதனையடுத்து எ.வ.வேலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் வழக்கை ரத்து செய்யக் கோரியும் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றம் ஜூலை 15-ம் தேதி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் லுக் அவுட் நோட்டீசுக்கு தடை விதித்தது. மேலும் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு ஜூலை 27-ம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் மீதான குற்றச்சாட்டு மற்றும் நீதிமன்ற உத்தரவு திமுகவுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்!! விசாரணைக்கு வராத எ.வ.வேலு! அதிகரிக்கும் பரபரப்பு!