“அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்” - விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிமுக வளர்மதி பதிலடி...!
திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறும் , ஒரே நபர் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கருத்து
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாரமங்கலம் அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதிமுக மகளிரணி மாவட்ட செயலாளர் லலிதா சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக மகளிரணி செயலாளருமான வளர்மதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்த கொண்டு உள்ளது.
5 லட்சம் ரூபாய் வரை ஒரு கிட்னி விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர். இந்த விவகாரம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் இது குறித்து வாய் திறக்கவில்லை. விஞ்ஞான ரீதியான ஊழல் செய்வதில் திமுகவை மிஞ்ச முடியாது , இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்து கூறும் ஒரே நபர் எடப்பாடி பழனிச்சாமி தான்,
திமுக ஆட்சியில் தினந்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடந்து வருகிறது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை, எந்த அதிகாரிக்கும் பயம் இல்லை .
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்து போனார்கள் , திமுக ஆட்சியில் மட்டும் தான் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் எளிதாக கிடைக்கிறது. பள்ளி கல்லூரிகளுக்கு அருகிலேயே விற்கப்படுகிறது , இதனை கட்டுபடுத்த இந்த திமுக அரசு தவறி விட்டது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி என உயரத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!
அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேசும் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுகவிற்கு ஊதுகுழலாக உள்ளது. கொள்கை வேறு , கூட்டணி வேறு என்பதை எடப்பாடி பழனிச்சாமி தெளிவுப்படுத்தி விட்டார். எங்கள் கூட்டணி குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கலுக்கு பட்டு புடவை தருவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார் ,எனவே மகளிர் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்..
இதையும் படிங்க: விசிக, தவெகவை கூட்டணிக்கு வாங்க, வாங்கன்னு கூப்பிட்டேனா? - பொறிந்து தள்ளிய எடப்பாடி பழனிசாமி...!