திமுக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மை!": தவெக-வில் இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள் உடைத்த ரகசியம்!
திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பமில்லாததால் அதிமுகவிலிருந்து விலகி, தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
"கடந்த 5 ஆண்டுகள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களாக இருந்ததால், தொகுதி மக்களுக்கு எவ்விதப் பணிகளையும் செய்ய முடியாமல் கடும் வேதனை அடைந்தோம்; தற்போது எங்களை நம்பி வாக்களித்த தொகுதி மக்களின் தார்மீக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலேயே, நாங்கள் அதிமுக பதவிகளைத் துறந்துவிட்டு முழு மனதோடு தவெக-வில் இணைந்துள்ளோம்" என்று முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த மூவரும், தாங்கள் பதவி விலகியதற்கான தார்மீகக் காரணங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியலிட்டனர். "கடந்த மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே அதிமுக தலைமைக்குள் பல்வேறு குழப்பங்கள் நீடித்தன. திமுக-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஒரு நிலைப்பாடும், தவெக-வுடன் இணைந்து செயலாற்றுவது என்று மற்றொரு நிலைப்பாடும் எடுக்கப்பட்டது. ஆனால், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கம், கொள்கைக்கு மாறாகத் திமுக-வுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எங்களுக்கு எள்ளளவும் விருப்பமில்லை" என்று விவரித்தனர்.
மேலும் திரைக்குப் பின்னால் நடந்த ரகசியங்களை உடைத்த அவர்கள், "திமுக-வுடன் இணைந்து எவ்வித ஆட்சியும் அமைக்கக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டோம். நாங்கள் ஆரம்பத்தில் தவெக-விற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டைத் தான் எடுத்தோமே தவிர, கட்சியை விட்டுப் போக நினைக்கவில்லை. ஆனால், அன்றிலிருந்து எங்கள் மீது சொந்தக் கட்சியினரே கடுமையான அவதூறுகளையும், தார்மீகமற்ற விமரிசனங்களையும் டாப் கியரில் பரப்பத் தொடங்கினர். இது எங்களுக்குப் பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்தியது" எனக் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க: குதிரை வேகத்தில் குதிரை பேரம்! தவெக அரசை 'துயரசக்தி' என அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
தொகுதி மக்களின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறிய முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், "கடந்த 2021 முதல் 2026 வரை எதிர்க்கட்சியாக இருந்து நாங்கள் பட்ட அவஸ்தைகள் எங்களுக்குத் தான் தெரியும். தொகுதி மக்களின் 10 விழுக்காடு கோரிக்கைகளைக் கூட ஆளும் தரப்பு நிறைவேற்றவில்லை. இந்த முறையும் மக்களை ஏமாற்ற நாங்கள் விரும்பவில்லை. எங்களது இந்த முடிவு சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காகவும் தொகுதி மக்களின் நலனுக்காகவும் மட்டுமே எடுக்கப்பட்டது" என்று கூறினர்.
தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அவர்களின் செயல்பாடுகளைப் பாராட்டிய அவர்கள், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தற்போதைய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்துள்ளார். ஒருபடி மேலாக, ஏழை எளிய மக்களின் பசியாற்றிய 'அம்மா உணவகங்களை' திமுக அரசு மூடிய நிலையில், நாங்கள் யாரும் கோரிக்கை வைக்காமலேயே முதல்வர் விஜய் பதவியேற்றவுடன் அம்மா உணவகங்களை மீண்டும் திறக்க அதிரடி உத்தரவிட்டுள்ளார். அவர் பதவியேற்ற 15 நாட்களுக்குள் மக்கள் எதிர்பார்க்கும் ஒரு நல்லாட்சியைக் கொடுத்து வருகிறார். தவெக தலைவர் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நாங்கள் தார்மீகக் கட்டுப்படுவோம்" என்று பிரகடனம் செய்தனர். இறுதியாக, 'மீண்டும் அதே தொகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்காமல் அவர்கள் காரில் ஏறிச் சென்றனர்.
இதையும் படிங்க: கோவை சிறுமி விவகாரத்தில் திமுக மீது பொய் பிரசாரம் தவெகவுக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!