எஸ்.பி.வேலுமணி டிக் அடித்த 21 பேர்... அதிமுக தோல்விக்கு காரணம் இதுவே... உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரமுகர்...!
எதார்த்தமாக அனைவரையும் பொதுசெயலாளர் எடப்பாடி நம்பினார் என ன்னாள் அமைச்சர் A.K.செல்வராஜ் பேச்சு
எஸ்.பி.வேலுமணி 21 வேட்பாளர்களை தேர்வு செய்தார், தேர்தல் தோல்விக்கு EPS காரணமில்லை, சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்களே காரணம்- முன்னாள் அமைச்சர் A.K.செல்வராஜ் பேச்சு
ஈரோடு அதிமுக அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணா தொழிற்சங்க புதிய மாநில செயலாளர் தமிழரசன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான A.K.செல்வராஜ் உரையாற்றும் போது, பணம், பதவி அனுபவித்து விட்டு பல கோடி சம்பாதித்தவர்கள், தங்கள் மீதான வழக்குகளுக்கு பயந்து அதிமுகவை விட்டு சென்று விட்டார்கள். அவர்களை பற்றி கவலை இல்லை.
இதையும் படிங்க: “செல்லாது... செல்லாது...” - எஸ்.பி.வேலுமணி தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்... நீதிபதிகள் கடும் எச்சரிக்கை...!
எதார்த்தமாக அனைவரையும் பொதுசெயலாளர் எடப்பாடி நம்பினார். எஸ்.பி.வேலுமணி 21 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமித்தார். அந்தந்த மாவட்ட செயலாளர்களே வேட்பாளர்களை தேர்வு செய்தனர்.
எடப்பாடி பழனிசாமி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். மக்கள் மாற்றத்தை விரும்பி மௌனபுரட்சி் செய்தார்கள் அதனால் தோற்றோம். இன்னும் சரியான வேட்பாளர்களை தேர்வு செய்திருந்தால் விஜய் முதலமைச்சராக ஆகி் இருக்க முடியாது. மாவட்ட செயலாளர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் சரியாக வேலை செய்யாததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது.
இந்த தோல்வியை கண்டு பயந்து் ஓட தேவை இல்லை. பதவி சுகத்தை அனுபவித்து விட்டு ஓடியவர்கள் செல்லட்டும். புதியவர்களை இன்னும் உருவாக்குவோம். சரியான நிர்வாகிகளை நியமித்து எழுச்சியோடு பணியாற்றுவோம்.. என்றார்.
இதையும் படிங்க: இபிஎஸ் கைக்கு போன கடிதம்... எஸ்.பி.வேலுமணி எடுத்த அதிரடி முடிவு... மகளிரணி கூட்டத்தில் பங்கேற்காததற்கு காரணம் இதுவா?