×
 

TVK VS DVK!! குறிவைக்கப்படும் விஜய்!! மக்களை குழப்ப திட்டமா? அலசல்!!

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு போட்டியாக திராவிட வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்திருக்கிறது.

மதிமுகவிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யா, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு (த.வெ.க.) போட்டியாக இந்தக் கட்சி உருவானதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேநேரம், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் "திராவிடம் என்ற பெயரை யாரும் தங்கள் கட்சிக்கு சேர்க்கவில்லை" என்ற கருத்துக்கு பதிலடியாக இது வந்ததாகவும் கூறப்படுகிறது.

மதிமுக கட்சி தொடங்கப்பட்ட காலமிருந்தே, அதன் தலைவர் வைகோவுடன் இணைந்தவர்கள் பலர் காலவரையின்றி விலகி வந்துள்ளனர். நாஞ்சில் சம்பந்த், திருப்பூர் முத்துரத்தினம் போன்ற பிரபலங்கள் இதற்கு உதாரணங்கள். திமுகவிலிருந்து வைகோ விலக்கப்பட்டபோது அவருக்கு உடன் நின்றவர்கள், துரை வைகோவின் வருகைக்குப் பிறகு கட்சியை விட்டு விலகினர் அல்லது நீக்கப்பட்டனர். 

இதையும் படிங்க: துரை வைகோவுக்கு ரூ.200கோடியில் சொத்து!! வைகோ வருத்தப்படுவார்!! பற்றவைக்கும் மல்லை சத்யா!

அந்த வகையில், சமீபத்தில் மல்லை சத்யாவும் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். நீண்ட காலமாக வைகோவின் நிழல் போலவே கட்சியில் இருந்த அவர், துரை வைகோ கட்சியில் சேர்ந்ததும், அவருக்கு தலைமை நிலையச் செயலர், பின்னர் முதன்மை செயலர் போன்ற உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார்.

இதன்பிறகு, மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனைகளை நடத்தினார். இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் துரை வைகோ நின்றபோது, மல்லை சத்யா அதை கடுமையாக விமர்சித்தார். சமாதான நடவடிக்கைகள் தோல்வியுற்ற நிலையில், சில நாட்களுக்கு முன்பு வைகோ, மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார். 
இந்நிலையில், துரை வைகோவுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ந்து வந்த மல்லை சத்யா, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து, இன்று சென்னை அடையாறில் நடைபெற்ற கூட்டத்தில் 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற கட்சியைப் பிரமாணிகமாகத் தொடங்கினார். கூட்டத்தில், மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பலர் இந்தப் புதிய கட்சியுடன் இணைந்தனர்.

இந்த அறிவிப்பு, சமூக வலைதளங்களில் உடனடியாக விவாதங்களைத் தூண்டியுள்ளது. கடந்த ஆண்டு நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியபோது, அதன் பெயரில் 'திராவிடம்' இல்லாததால் சர்ச்சை எழுந்தது. இப்போது மல்லை சத்யாவின் கட்சி பெயரில் 'திராவிடம்' சேர்க்கப்பட்டுள்ளதால், இது விஜயின் கட்சிக்கு போட்டியாக உருவானதாக சிலர் விமர்சிக்கின்றனர். 

அதேநேரம், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், "கட்சிகள் தொடங்கும்போது 'திராவிடம்' என்ற பெயரை யாரும் சேர்க்கவில்லை" என்று கூறியிருந்தார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மல்லை சத்யா இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழக அரசியலில் 'திராவிடம்' என்ற சொல் பொதுவானது. திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் இதற்கு உதாரணங்கள். ஆனால், சமீப காலத்தில் மக்கள் நீதி மய்யம், தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளில் 'திராவிடம்' இல்லை. கடைசியாக விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தில் மட்டும் இந்தச் சொல் இடம்பெற்றது. இந்தப் பின்னணியில், மல்லை சத்யாவின் கட்சி திராவிட இயக்கத்தின் மீதான பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவோ அல்லது அரசியல் உத்தியாகவோ பார்க்கப்படுகிறது.

மல்லை சத்யா, கூட்டத்தில் பேசும்போது, "நான் திராவிட இயக்கப் போரளி. இந்தக் கட்சி திராவிடர்களின் வெற்றிக்காகவும், சமூக நீதிக்காகவும் செயல்படும்" என்று கூறினார். ஆனால், இந்தக் கட்சி தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா அல்லது பத்தோடு பதினைந்தாக கலைந்து போகுமா என்பதை காலம்தான் சொல்லும்.

இதையும் படிங்க: மக்கள் நல கூட்டணி உருவானதில் உள்ள மர்மங்கள்!! குட்டையை குழப்பும் மல்லை சத்யா! வெளிவருமா உண்மைகள்?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share