×
 

கர்நாடகா, மத்தியப்பிரதேசத்தை பாருங்க சி.எம்.... கொஞ்சம் ஏத்திக்கொடுங்க... விஜய்க்கு விவசாயிகள் வைத்த அதிரடி கோரிக்கை...!

விவசாயிகளுக்கு மாட்டுப் பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 50-ம் எருமை பாலுக்கு லிட்டர் ரூபாய் 70 வழங்கினால் மட்டுமே கட்டுபடியாக கூடிய அளவில் சூழல் நிலவி வருகிறது. 

தமிழ்நாடு அரசு தற்போது வழங்கியுள்ள பால் கொள்முதல் விலை உயர்வு விவசாயிகளுக்கு போதுமானது அல்ல  முதல்வர் அவர்கள் தேர்தல் கால வாக்குறுதிப்படி லிட்டருக்கு ரூ. 44 வழங்கிட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இன்று தமிழ்நாடு சட்டசபையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்கள் 110 விதியின் கீழ் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய் விலை உயர்வு  வழங்கப்படும் எனவும், தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் ஊக்க தொகையை லிட்டருக்கு ரூபாய் மூன்றில் இருந்து ஐந்து ரூபாயாகவும் உயர்த்தி அறிவித்துள்ளார் .

தற்போது தமிழ்நாடு அரசு சராசரியாக மாட்டுப்பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 31 வழங்கி வருகிறது ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூபாய் மூன்று ரூபாய் வழங்குவதுடன் சேர்த்து சராசரியாக  ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு ரூபாய் 34 கிடைத்து வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு மாட்டுப் பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 50-ம் எருமை பாலுக்கு லிட்டர் ரூபாய் 70 வழங்கினால் மட்டுமே கட்டுபடியாக கூடிய அளவில் சூழல் நிலவி வருகிறது. 

இதையும் படிங்க: தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

பசுந்தீவனம் அடர் தீவனம் உள்ளிட்ட மாட்டு தீவனங்களும் ஆள்கூலியும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்னொரு புறம் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டவுடன் உடனடியாக தவிடு புண்ணாக்கு விலைகள் உடனடியாக உயர்த்தப்பட்டு விவசாயிகளுக்கு இந்த விலை உயர்வின் பலன் கிடைக்காத வகையில் கார்ப்பரேட் சதியும் செய்யப்படுகிறது. 

கர்நாடகாவில் பாலுக்கு சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 42 ம், ஊக்கத்தொகை எட்டு ரூபாய் சேர்த்து 50 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய  பிரதேசத்தில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 62 ம், பஞ்சாப்பில் லிட்டர் ரூபாய் 65 ம் வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் லிட்டருக்கு ரூபாய் 44 வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது ஆனால் அறிவிப்பின்படி தேர்தல் வாக்குறுதி படி விலை உயர்வு வழங்கப்படாதது விவசாயிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு நீண்ட காலமாக விளிம்புத் தொகை உயர்த்தி வழங்கப்படாமல் உள்ளதால் பணியாற்றும் ஊழியர்களும் மிகக் கடுமையான சிரமத்தில் உள்ளார்கள்.  எனவே தற்போது தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள பால் கொள்முதல் விலை உயர்வு என்பது விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் கட்டுபடியாககூடியது அல்ல. 

குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதி படி கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிடும் அதே வேளையில் ஆவின் நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து பாதுகாப்பதற்காக விற்பனை விலையையும் உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பால் விலை உயர்வை மறுபரிசீலனை செய்து லிட்டருக்கு ரூபாய் பத்து உயர்த்தி வழங்கிட வேண்டும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் .

இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு... சி.எம். விஜய்க்கு காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share